Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவகிரக வழிபாட்டுத் துதி
நவகிரக வழிபாட்டுத் துதி
நவகிரக வழிபாட்டுத் துதி

சூரியன் துதி

காசினி இருளை நீக்குங் கதிரொளியாகி யெங்கும்
பூசனை யுலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசியே ழுடைய தேர்மேன் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா வெனைரட் சிப்பாய் செங்கதி ரவனே போற்றி.

சந்திரன் துதி

அலைகட லதனி னின்று மதியும்வந் துதித்தபோது
கலைவளர் திங்களாகிக் கடவுள ரெவரு மேத்துஞ்
சிலைமுத லுமையாள் பங்கன் செஞ்சடைபிறையா மேரு
மலைவல மாகவந்த மதியமே போற்றி போற்றி.

செவ்வாய் துதி

வசனநல் தைரியத்தோடு மன்னர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றியாண்மை
நிசமுட னவரவர்க்கு நீணிலந் தனில ளிக்குங்
குலனில மகனாஞ் செவ்வாய்க் குரைகழல்
போற்றி போற்றி.

புதன் துதி

மதனநூல் முதலா நான்கு மறைபுகல் கல்விமானும்
விபுமுட னவரவர்க்கு விஞ்ஞைகள ருள்வெண் டிங்கள்
கதனுமா நிலத்தோ ரிச்சை சுகம்பல கொடுக்க வல்லன்
புதன்கவி புலவன் சீர்சால் பொன்னடி போற்றி போற்றி.

குரு துதி

மறைமிகு கலைநூல் வல்லோன் வான வர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்பகப்பொன் னாட்டினுக் கதிபனாகி
நிறைதனஞ் சிவிகை மண்ணி னீடுபோகத்தை நல்கும்
இறையவன் குருவியாழ னிருமலர்ப் பாதம் போற்றி.

சுக்கிரன் துதி

மூர்க்கவான் சூரன் வாணன் முதலியோர் குருவாய் வையங்
காக்கவான் மழைபெய்விக்குங் கவிமகன் கனகமீவோன்
றீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமையெ ழுப்பும்
பார்க்கவன் சுக்கராச்சாரி பாதபங்கயமே போற்றி

சனி துதி

முனிவர்கள் தேவ ரேழு மூர்த்திகள் முதலியோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமைய தல்லா லுண்டோ
கனிவுள தெய்வ நீயே கதிர்சேயே காக மேறுஞ்
சனியனே யுனைத் துதிப்பேன் றமியனேற் கருள்செய்வாயே.

ராகு துதி

வாகுவோர் நெடுமான் முன்னம் வானவர்க் கமுத மீயும்
போகுமக் காலையுன்றன் புணர்பினாற் சிரமேயற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பான்கையில் மீண்டு பெற்ற
ராகுவே யுனைத் துதிப்பேன் இக்கணமி ரட்சிப்பாயே.

கேது துதி

பொன்னையி னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டலாகும்
தன்னையே கடைந்து முன்னந் தண்ணமுதளிக்க லுற்ற
பின்னைநின் கரவானுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய்
என்னையாள் கேதுவேயிவ் விருநிலம் போற்றத்தானே.

ராகு துதி

வாகுவோர் நெடுமான் முன்னம் வானவர்க் கமுத மீயும்
போகுமக் காலையுன்றன் புணர்பினாற் சிரமேயற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பான்கையில் மீண்டு பெற்ற
ராகுவே யுனைத் துதிப்பேன் இக்கணமி ரட்சிப்பாயே.

கேது துதி

பொன்னையி னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டலாகும்
தன்னையே கடைந்து முன்னந் தண்ணமுதளிக்க லுற்ற
பின்னைநின் கரவானுண்ட பெட்பினிற் சிரம் பெற்றுய்ந்தாய்
என்னையாள் கேதுவேயிவ் விருநிலம் போற்றத்தானே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.