Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கிருஷ்ண துதி
கிருஷ்ண துதி
கிருஷ்ண துதி

க்ருஷ்ணாய பூர்ணபுருஷாய பராத்பராய
யக்ஞேச்வராய பரகாரணகாரணாய
ராதாவராய பரிபூர்ணதமாய ஸாக்ஷாத்
கோலோகதாமதிஷணாய நம: பரஸ்மை

பூரணப் பொருள், மேன்மைக்கு மேலானது, யாகங்களின் தலைவன், யாவற்றிக்கும் காரணப்பொருள், ராதையின் நாயகன், புலனடக்கம் நிறைந்தவன் மற்றும் கோகுலத்தில் உறைகின்ற பரம்பொருளுமாகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

யோகேச்வரா: கில வதந்தி மஹ: பரம் த்வம் தத்ரைவ ஸாத்வதமநா: க்ருதவிக்ரஹம் ச.

அஸ்மாபிரத்ய விதிதம் யததோத்வயம் தே தஸ்மை நமோஸஸ்து மஹஸாம் பதயே பரஸ்மை

நீ பெரும் ஜோதி, நிலைபெற்ற மனதினன் என்று வர்ணிக்கின்றனர் யோகியர்! நீ மாற்றுருக்கொள்ளாத பரமனென்று நாங்கள் இப்போது அறிந்து கொண்டோம். பேரொளியின் தலைவனே! உனக்கு நமஸ்காரம்.

வ்யங்க்யேந வா ந ந ஹி லக்ஷணாய கதாபி ஸ்போடேந யச்ச கவயோ ந விசந்தி முக்யா:

நிர்தேச்யபாவரஹிதம் ப்ரக்ருதே பரம் ச த்வாம் ப்ரஹ்ம நிர்குணம் அமலம் சரணம் வ்ரஜாம:

மூலப் பொருளே! புற சாதனங்களைக் கொண்டு மாபெரும் அறிஞர்களாலும்கூட அணுக முடியாத, குறிப்பால் உணர்த்த இயலாத, குணங்களற்ற, களங்கமற்ற பரப்பிரம்மமாகிய உன்னைச் சரணடைகிறோம்.

த்வாம் ப்ரஹ்ம கேசித் வதந்தி பரே ச காலம் கேசித் ப்ரசாந்தமபரே புவி கூர்மரூபம்

பூர்வே ச யோகமபரே கில கர்த்ரு பாவம் அந்யோக்திபிர்ந விதிதம் சரணம் கதா ஸ்ம

பிரம்மம், காலம், அமைதி ரூபமானவன், கூர்ம வடிவில் உலகைத் தாங்குபவன், நிலையான யோகி, செயல்வடிவான கர்த்தா, பிற தத்துவ வழிகளால் அறியப்படாதவன் என்றெல்லாம் பலரால் வர்ணிக்கப்படும் உன்னைச் சரணடைகிறோம்.

ச்ரேயஸ்கரீம் பகவதஸ்தவ பாதஸேவாம் ஹித்வாஸத தீர்த யஜநாதி தபச்சரந்தி

ஜ்ஞாநேந யே ச விதிதா பஹுவிக்நஸங்கை: ஸந்தாடிதா கிமு பவந்தி ந தே க்ருதார்தா:

மிகவும் மேலானதான உனது பாதம் பணிவதை விட்டுவிட்டுத் தீர்த்த யாத்திரை, யாகம், தவம் என்று பலவித அலைக்கழிப்புகளால் துயருற்ற மக்கள் தமது முயற்சிகளால் பலன் பெறமாட்டார்களா?

விஜ்ஞாப்யமத்ய கிமு தேவ அசேஷஸாக்ஷீ ய: ஸர்வபூத ஹ்ருதேஷு விராஜமாந:

தேவைர்நமத்பிர் அமலாய முக்ததே ஹைஸ்தஸ்மை நமோ பகவதே புருஷோத்தமாய

இறைவா! தேவர்களாலும் யோகியராலும் உன்னிடம் தெரிவிக்கப்பட வேண்டியதும் உண்டோ? அனைத்துயிர்களின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்த, அப்பழுக்கற்ற, நற்குண நாயகனே! நமஸ்காரம்.

யோ ராதிகா ஹ்ருதயஸுந்தரசந்த்ரஹார: ஸ்ரீகோபிகாநயநஜீவநமூலஹார:

கோலோகதாமதிஷணத்வஜாதிதேவ: ஸ த்வம் விபத்ஸு விபுதாந் பரிபாஹி பாஹி

ஸ்ரீராதைøயின் இதயம் எனும் அழகிய நிலவை மாலையாகக் கொண்டவனும், கோபிகைகளின் கண்களை உயரிப்பிக்கும் மூலசக்தியை மாலையாகக் கொண்டவனும், கோகுலத்தின் உயிர்க்கொடியின் முதற்கடவுளும் ஆகிய நீ, விபத்துக்களின்போது சான்றோரைக் காத்தருள்க!

வ்ருந்தாவநேச கிரிராஜபதே வ்ரஜேச கோபால வேஷக்ருத நித்ய விஹாரலீல

ராதாபதே ச்ருதிதாராதிபதே தாரம் த்வம் கோவர்த்தநோத்தரணோத்தரதர்மதாராம்

பிருந்தாவனத் தலைவனே! கோவர்த்தனகிரியின் நாயகனே! வ்ரஜபூமியின் இறைவனே! இடைச் சிறுவனாக வேடம் பூண்டு பல லீலைகள் புரிந்தவனே! ராதையின் காவலனே! வேதங்களின் ரட்சகனே! நீர் புவியையும் அறத்தையும் கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்ததைப் போல் காத்தருளும்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar