Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வீரமாச்சியம்மை பதிகம்
வீரமாச்சியம்மை பதிகம்
வீரமாச்சியம்மை பதிகம்

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)

காப்பு -வெண்பா

சிரவணம் பட்டியின்பாற் சேர்வீர மாச்சி
வரமருவும் தோத்திரப்பா வாய்ப்பச்- சிரமருவுங்
கையுடையா னாதக் கழலுடையா னன்பருட்டோய்
மெய்யுடையான் காப்பாகு மே.

நூல்

அறுசீர் விருத்தங்கள்.

1. களங்கமுறாச் செக்கரணி கலந்தமுழு
மதிபோலுங் கவின் மிக்கோங்கி
விளங்கணிதோய் திலகவத னமும்பரந்த
விழிமலரு மின்னேயென்னத்
துளங்கியலிட் டிடைபொலிபட்டுடை
தொடிக்கை யும்பதமுந் தோற்றியாள்வாய்
வளங்குலவு நலம்பலவுந் தோய்சிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

2. பழித்துணையாம் பாவமுளம் பற்றாது
தராசமையும் பண்பேபோல
மொழித்துணைவாய்த் தெவ்வுயிர்க்கு நலமே
செய்திடுங்கருணை முதிர்ச்சிநல்கி
விழித்துணையூ டுன்பதமே கருதிவழி
படுமன்பின் விரிவுற்றோங்க
வழித்துணையா கிடவேண்டுங் காண்சிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

3. பாயசங்குக் குடம்பலியிட் டவைபுரிய
பாயசத்தப் பண்பற்றின்பார்
பாயசம்பற் பலமணஞ்சால் சாதனங்க
ளிட்டுருகிப் பரிவினோடும்
ஆயசம்வற் சரத்துடனித் தியம்புரிந்து
பணிவோர்கட் கதக்காமிச்சை
வாயசம்பத் தத்தனையுந் தருஞ்சிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

4. முருந்துறழ்வெண் ணகைச்செவ்வாய்க்
கருங்குழற்சிற் றிடைகொளருண் முதல்வியுன்னைப்
பொருந்துமொரு குலதெய்வ மெனச்சொலினவ்
வாறுநிற்பாய் புதுமைசான்ற
விருந்துறழ வருவாருன் றனைப்போற்றிற்
பயனின்றி வீணாவாரோ
மருந்துருவா யுயிர்குலத்தே வாஞ்சிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

5. கோயில்விளங் கிடக்குடிகள் விளங்குமென்பா
ரௌவை முனங் குளிர்தீஞ்சொல்லால்
தாயில்விளங் கிடச்சிறந்த கோயிலில்லை
யென்றதனாற் றமியே மெம்மைச்
சேயில்விளங் கிடக்கொளுனை வாழியென
விழாவெடுத்துச் சேவித்தேமுன்
வாயில்விளங் கிடவாசி புகல்சிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

6. அணித்தாகும் பலபலவாம் பதிகளிடத்
தமைவாருமம்மை யென்றுட்
கணித்தாகும் பணியினுமும் பட்டுடையு
மலர்த்தொடையுங் கனிவிற்கொண்டே
பணித்தாக மிகச் செய்வோர் கோரிக்கை
கொண்டுசௌபாக் கியங்கண்முற்றும்
மணித்தானத் தடங்கையினல் குதிசிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

7. தாயிருக்கப் பிள்ளையுள்ளந் தளர்வதுண்டோ
திருவருட்சீர்ச் சலதியான
நீயிருக்க யாங்கண்மெலி வுறலாமோ
விதுமுறையா நீதியாமோ
காயிருக்குங் கன்மனத்தெம் பிழைகுறியா
துட்பொலியுங் கருணைபொங்கும்
வாயிருக்க வஞ்சலென்னா தென்சிரவை
நகர்வீர மாசித்தாயே.

8. கற்புநிலை யும்பொலிவார் கட்டழகும்
பெறுமடவார் கணமும்விண்ணார்
வெற்புமுடி தோய்விளக்கிற் குலத்தை
விளக்கிடும் புதல்வர் மெய்மைப்பேறும்
பொற்புயரும் பதிவாழ்வும் பெற்றுநின்றொண்
டினர்வாழப் புரியவுன்பால்
வற்புறுத்து வேற்கிரங்கி யருள்சிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

9. வாசனைநை வேத்தியங்கள் பாற்பொங்க
லாதியிட்டு மகிழ்வினோடுன்
பூசனைவை பவமங்க ளச்சகுணத்
திருச்சேவை போற்றுவோர்க்குத்
தேசனைத்தும் பெறவளித்திட்டுன் கருணைக்
கண்ணோக்கஞ் செலுத்தியென்றும்
மாசனைத்துந் தவிர்த்தருள்வாய் சரண்சிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

10. விதுவேண்டும் பூரணமா ரருண்முகக்கண்
பெற்றநின்பால் விவேகமின்றி
இதுவேண்டு மதுவேண்டு மென்றிரக்கே
னடியேனுக் கெவையுந்தந்தே
பொதுவேண்டும் புதுஞான நலமுமளித்
தாள்வதுன்றன் பொறுப்பேவிண்ணோர்
மதுவேண்டு மலர்ப்பொதுளார் கான்சிரவை
நகர்வீர மாச்சித்தாயே.

11. கோலமிகப் பொலிகொங்கு நாட்டினுக்கோர்
முகமானக் குலவிச்சூலார்
மாலமைபூந் துடவைகொண்மங்
களச்சிரவை நகர்வீர மாச்சித்தாயைப்
பாலனெனக் கைக்கொண்டப் பாலனெனப்
புரிந்தருண்மெய்ப் பாலைவேண்டிச்
சீலமுறு வான்கந்த சாமிதுதி
யோதுநர்மெய்த் திருவுள்ளாரே

வாழி விருத்தம்.

கொங்கமையுஞ் சிரவணநன் னகர்வாழி
சிவபெருமான் குமரர்வாழி
சங்கமைகைக் கரிவரதன் வாழியம்மை
யார்களின்பந் தழைத்துவாழி
யங்கமையா லயம்பசுக்க ளன்பர்மழை
கற்புடைய ரரசர்வாழி
யெங்கமையு நலங்களெல்லாம் பல்லாண்டு
வாழியின்ப மிசைந்துமாதோ.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.