Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பயம் நீக்கும் வழிபாடு!
பயம் நீக்கும் வழிபாடு!
பயம் நீக்கும் வழிபாடு!

அனுமன் ஜெயந்தியன்று அவரை வழிபடுவதற்காக இந்த ஸ்தோத்திரத்தை தந்துள்ளோம். இதை சொல்பவர்களுக்கு பய உணர்வு, எதிரிகளின் தொல்லை, கடன் ஆகியவை நீங்கும்.

*இடது கையில் எதிரிகளை வெல்லும் மலையையும், மற்றொரு கையில் தண்டாயுதத்தையும் கொண்டவரும், வெண்மையான பூணுõல் அணிந்தவரும், பிரகாசிக்கும் குண்டலத்துடன் கூடியவருமான ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குகிறேன். பட்டாடை அணிந்தவரும், மான்தோலை போர்த்திக்கொண்டவரும், பிரகாசிக்கும் கூந்தலை முடிந்தவருமான ஆஞ்சநேயரை சரணம் அடைகின்றேன்.
*ஆபத்தை அடைந்த எல்லோரது மனக்கவலையை போக்குகிறவரும், எதிர்பாராமல் வந்து உதவுபவரும், விபத்துகளில் இருந்து பாதுகாப்பு தருகிறவருமான ஆஞ்சநேயரை பணிந்து வணங்குகிறேன்.
*சீதையை விட்டுப் பிரிந்த ஸ்ரீராமனின் சோகம், துக்கம், பயம் இவைகளைப் போக்குகிறவரும், ஆசைகளை விரட்டுகிறவருமான ஆஞ்சநேயரை நமஸ்காரம் செய்கின்றேன்.
*கவலை, வியாதி, அம்மை,கிரகபீடை ஆகியவற்றைப் போக்குகிறவரும், அசுரர்களைக் கொன்று அவர்களை அடக்குகிறவரும், ராமனின் உயிர்க்கும் உயிராக விளங்குபவருமான அனுமனை வணங்குகிறேன்.
*சம்சார சமுத்திர சுழலில் அகப்பட்டு செய்ய வேண்டிய செயல்களை செய்யாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்யும் ஆஞ்சநேயப் பெருமானே! உனக்கு எனது வந்தனம்.
*அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளை தடங்கல் இன்றி சாதிக்க உதவுபவரும், மிருகங்கள் மற்றும்
திருடர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பவரும், வாயுபுத்ரனும், வானரங்களுக்கு உயிரானவருமானஅஞ்சனை மைந்தருக்கு எனது பணிவார்ந்த நமஸ்காரம்.
*ராமபிரானுக்குப் பிரியமானவரும், கருணை நிறைந்தவரும், பயத்தைப் போக்கிறவரும், எதிரிகளை ஒழிப்பவரும், கெட்டவர்களுக்கு கெட்டவரும், அனைத்து செல்வங்களையும் தருபவருமான ஆஞ்சநேயரே! எனக்கு காரிய சித்தியும், கீர்த்தியும் அருள வேண்டுகிறேன்.
*ஆஞ்சநேயரே! நான் பயணம் செய்யும் போதும், தேசத்திற்காகப் போராடும்போதும் எனக்காக உடனிருந்து என்னை நோக்கிவரும் ஆபத்துகளை தடுத்து உதவ பிரார்த்தனை செய்கின்றேன்.
*வஜ்ராயுதம் போன்ற சரீரம் உள்ளவரும், அளவற்ற தேஜஸ் உள்ளவரும், போர்க்களத்தில் அக்னிபோல் திகழ்பவரும், பிரம்மாஸ்திரத்தையே ஸ்தம்பிக்கச் செய்பவரும், ருத்ரமூர்த்தியுமான ஆஞ்சநேயருக்கு நமஸ்காரம் செய்கின்றேன்.
*வானரங்களுக்கு ஈஸ்வரனும், அளவற்ற உற்சாகம் உள்ளவரும், எதிரிகளைச் சம்காரம் செய்பவருமான ஆஞ்சநேயரே! உமது பக்தனாகிய எனக்கு செல்வத்தை தந்தருளும்.
*சுத்தமான மனதை உடையவரும், ராமதுõதர்களில் முதல்வரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயுகுமாரரும், பாலசூரியனுக்கு ஒப்பான முக கமலத்தை உடையவரும், கருணை பொங்கும் கண்களை உடையவரும், யுத்தத்தில் இறந்த வானரர்களை சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து பிழைக்கச் செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவி செய்த புண்ணியத்தால் அவதரித்தவருமான ஆஞ்சநேயரே! உம்மை தரிசித்து மகிழ்கிறேன்.
*மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரைப் பூப்போல பெரிய கண்களைக் கொண்டவரும், அழகு பொருந்தியவரும், சங்குபோன்ற கழுத்தை உடையவரும், வாயுதேவரின் பாக்கிய புத்திரருமான ஆஞ்சநேயரே! உம்மைச் சரணடைகிறேன்.
*சீதையின் கஷ்டங்களை விலக்கியவரும், ஸ்ரீராம மகிமையின் நினைவை உருவாக்குகிறவரும்,
துன்பப்படுபவர்களை ரட்சிப்பவருமான ஆஞ்சநேயரைக் குறித்த இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று ஸ்ரீராமனின் அருளையும், ஆஞ்சநேயரின் அருளையும் பெற்று நீண்ட காலம் உலகில் வாழ்வார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.