Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நடராஜ தசகம்!
நடராஜ தசகம்!
நடராஜ தசகம்!

(அன்ந்தராம தீட்சிதர் இயற்றியது)

1. கனகஸபாகத காஞ்சனவிக்ரஹ
காமவிநிக்ரஹ காந்ததனோ
கலிகலிதாகில பாபமலாபஹ
க்ருத்திஸமாவ்ருததேஹ விபோ
குவலயஸன்னிப ரத்னவிநிர்மித
திவ்யகிரீட ஸுபாஷ்டதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

ஸ்வர்ணமயமான ஸபையில் இருக்கிறவரும், பொன்போன்ற மூர்த்தியை உடைய வரும், மன்மதனை ஜயித்தவரும் அழகிய சரீரமுள்ளவரும், க லியினால் ஏற்பட்ட எல்லாவிதமான பாபங்களாகிற அழுக்கைப் போக்குகிறவரும், யானைத் தோலை அணிந்தவரும், ப்ரபுவானவரும். நீலோத்பல  புஷ்பம்போல் நிறமுள்ள ரத்னங்களால் இழைக்கப்பட்ட திவ்ய கிரீடத்தை உடையவரும், மங்களமான எட்டு சரீரத்தை உடையவரும், உலகிற்கு நாய கனும், மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

2. கரகலிதாமல ஸூலபயங்கர
காலநிராஸக பாதவிபோ
பதகமலாகத பக்தஜனாவன
பத்தஸுகங்கண தேவ விபோ!
ஸிவநிலயாகத பூதிவிபூஷித
தீக்ஷித பூஜித பூஜ்யதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜ மே!!

நிர்மலமான சூலத்தைக் கையில் ஏந்தியவரும், பயங்கரமான காலனை உதைத்தவரும், ப்ரபுவும், தாமரை போன்ற பாதங்களை வந்தடைந்த  பக்தர்களைக் காப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டவரும், தேவர்களுக்குள் சிறந்தவரும், கைலாஸத்திலிருந்து வந்தவர்களும், விபூதியினால்  அலங்கரிக்கப் பெற்றவர்களுமான தீக்ஷிதர்களால் பூஜிக்கப்பட்டவரும், பூஜிக்கத் தகுந்த சரீரத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

3. ஹர ஹர ஸங்கர பக்தஹ்ருதம்பர
வாஸசிதம்பர நாத விபோ
துரிதநிரந்தர துஷ்டபயங்கர
தர்ஸன ஸங்கர திவ்யதனோ!
தஸஸதகந்தர ஸேஷஹ்ருதந்தர
ஸங்கர ரக்ஷித பார்த்தகுரோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

ஓ ஹர ஹர, சுகத்தைச் செய்கிறவரும் பக்தர்களின் ஹ்ருதயாகாசத்தில் வீற்றிருப்பவரும், சிதம்பர நாதரும், ப்ரபுவும், இடைவிடாது பாபங்களைச்  செய்யும் துஷ்டர்களுக்கு பயத்தை அளிப்பவரும், (தர்சனாதப்ரஸதஸி) என்றபடி தரிசனம் செய்வதாலேயே முக்தியைக் கொடுப்பவரும், திவ்ய  ஸ்வரூபம், ஆயிரம் தலையனான ஆதிசேஷனின் ஹ்ருதயத்தில் இடம் பெற்றவரும், (துரோண) யுத்தத்தில் அர்ஜுனனை ரக்ஷித்தவரும், குரு வானவரும், உலகிற்கு நாயகனும், மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க  வேண்டும்.

4. ஸிவஸிவ ஸங்கர ஸாம்பபுரந்தர
பூஜித ஸுந்தர மந்த்ரநிதே
முரஹரஸன்னிதி மங்களதர்ஸன
மந்த்ர ரஹஸ்ய சிதாத்மதனோ!
புரஹரஸம்ஹர பாபமபாகுரு
பீதிமராதிக்ருதாமகிலாம்
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம் ருத்திமுபார்ஜய மே!!

மங்களுங்களுக்கெல்லாம் மங்களத்தைச் செய்பவரும், சங்கரரும், அம்பாளுடன் கூடியவரும், இந்திரனால் பூஜிக்கப்பட்டவரும், அழகு வாய்ந்தவ ரும், மந்திரங்களுக்கு இருப்பிடமும், பக்கத்திலிருக்கும் முரஹரனான கோவிந்த ராஜனின் ஸந்நிதியிலேயே மங்களகரமான தரிசனத்தைக் கொடுப் பவரும், மந்திர ரூபமாயும், ரஹஸ்ய ரூபமாயும் இருப்பவரும், சித்ஸ்வரூபமான சரீரத்தை உடையவரும், த்ரிபுரஸம்ஹாரம் செய்தவரும் ஆன ஓ சி த்ஸபேசா, பாபங்களை ஸம்ஹரிக்கவேண்டும், எதிரிகளால் செய்யப்பட்ட எல்லா பயத்தையும் போக்கவேண்டும், உலகிற்கு  நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

5. புஜக விபூஷண பூதிவிலேபன
பாலவிலோசன லோகதனோ
வ்ருஷபஸுவாஹன காங்கபயோதர
ஸுந்தரநர்த்தன ஸோமதனோ!
ஸுததனதாயக ஸௌக்யவிதாயக
ஸாதுதயாகர ஸத்வதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

ஸர்பங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், விபூதியை அணிந்து கொண்டிருப்பவரும், நெற்றிக் கண்ணை உடையவரும், உலகை சரீரமாகக்  கொண்டவரும், வ்ருஷபவாஹனரும், கங்கையை தரிப்பவரும், அழகிய நர்த்தனத்தைச் செய்பவரும், உமையுடன் கூடிய சரீரமுடையவரும் புத்ர  லாபத்தையும், தன லாபத்தையும் அளிப்பவரும் சவுபாக்கியத்தைச் செய்கிற வரும். நல்லவர்களிடத்தில் தயையைக் காட்டுகிறவரும் ஸத்வகுண  ஸ்வரூபரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்..

6. ஸகலஹ்ருதந்தர சந்த்ரகலாதர
மந்த்ரபராக்ருத பூதததே
சரணஸமர்ச்சன திவ்யக்ருஹாகத
தேவவரார்பித பாக்யததே!
விதிஹரிநாரத யக்ஷஸுராஸுர
பூதக்ருதஸ்துதி துஷ்டமதே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

ஸகல ஜீவராசிகளின் இதயத்திலும் இடம்பெற்றவரும், சந்திரக்கலையைத் தரிப்பவரும், மந்திரங்களாலேயே விரட்டப்பட்ட பூதஸமூகங்களை  உடையவரும், சரணங்களில் அர்சனம் செய்ய தேவலோகத்திலிருந்து வந்த சிறந்த தேவர்களுக்கு எல்லா பாக்யங்களையும் அளித்தவரும், ப்ரும்மா,  விஷ்ணு, நாரதர், யக்ஷர்கள், தேவர்கள், அசுரர்கள், பூதங்கள் இவர்கள் செய்த துதியால் சந்தோஷம் கொண்டவரும், உலகிற்கு நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும். நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

7. கிரிதனயார்பித சந்தன சம்பக
குங்கும பங்கஜ கந்ததனோ
திமி திமி திந்திமி வாதன நூபுர
பாததலோதித ந்ருத்தகுரோ!
ரவிகிரணாஸ்தமயாகத தைவத
த்ருஷ்டஸுநர்த்தன தக்ஷதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருதத்திமுபார்ஜய மே!!

பர்வதராஜகுமாரி அளித்த சந்தனம், சம்பக புஷ்பம், குங்குமம், தாமரைப்பூ இவைகளால் வாஸனை நிரம்பிய சரீரத்தை உடையவரும், திமி திமி திந் திமி என்று சப்திக்கும் நூபுரங்களுடன் கூடிய பாத தலத்திலிருந்து உண்டான நடனக் கலையை உடையவரும், குருவானவரும், ப்ரதோஷ காலதத்தில்  வந்த தேவக் கூட்டங்களால் காணப்பெற்ற அழகிய நர்த்தனத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க ÷ வண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

8. ஹிமகிரிஜாகர ஸங்க்ரஹணோதித
மோதஸுபூர்ண ஸுவர்ணதனோ
குஹகணநாயக கீதகுணார்ணவ
கோபுரஸூசித விஸ்வதனோ!
குணகணபூஷண கோபதிலோசன
கோபகுலாதிப மித்ரமணே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

இமயனின் பெண்ணான பார்வதியை பாணிக்ரஹணம் செய்து கொண்டு அதனால் சந்தோஷம் நிரம்பியவரும், சிறந்த நிறமுள்ளவரும், குஹன்,  கணபதி இவர்களால் பாடப்பெற்ற குணங்களை உடையவரும், கோபுரத்தாலேயே விச்வரூபத்தை சூசித்தவரும், குணங்களையே அலங்காரமாகக்  கொண்டவரும், சூரியனைக் கண்ணாக உடையவரும், இடையர் குலத் தலைவனான கிருஷ்ணனுக்கு மிக்க ஸ்னேகமானவரும், உலகிற்கு நாயகனும்  ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

9. டமருக தாரிண மிந்துகலாதர
மிந்த்ரபதப்ரத மக்னிகரம்
குஹஜனனீயுத மாத்தம்ருகோத்தம
மர்த்திஜனாகில ரோகஹரம்!
பஜ பஜ மானஸ விஸ்ம்ருதிகாரக
ரோகதநூபரிதத்தபதம்
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாகயஸம்ருத்திமுபார்ஜய மே!!

உடுக்கை தரித்தவரும், சந்திக்கலையை தரித்தவரும், இந்திர பதத்தை அளிப்பவரும் அக்னியை கையில் தரித்தவரும், பார்வதி தேவியுடன் கூடியவ ரும், மானைக் கையில் தரித்தவரும், அண்டிய ஜனங்களின் எல்லா ரோகங்களையும் போக்குகிறவரும், அபஸ்மாரம் என்ற ரோக தேவதையின்  சரீரத்தில் கால்வைத்து நின்றவரும், ஆன பரமேச்வரனை, ஏ மனமே, பூஜிப்பாய், பூஜிப்பாயாக, உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சி றந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.

10. நதஜனஸங்கர பிங்கஜடாதர
கண்டலஸத்கர கௌரதனோ
வரதபதஞ்சலி ஸத்க்ருதி ஸன்னுத
ம்ருகசரணார்பிதபுஷ்பததே!
டமருக வாதன போதித
ஸர்வகலாகில வேதரஹஸ்யதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

வணங்கிய ஜனங்களுக்கு ஸுகத்தை செய்கிறவரும், மஞ்சள் நிறமான ஜடையை உடையவரும், கழுத்தில் விளங்கம் விஷத்துடன் கூடியவரும்,  வெளுப்பான சரீரத்தை உடையவரும், வரங்களை அளிப்பவரும், பதஞ்சலி முனியின் ஸ்தோத்திரத்தால் துதிக்கப்பட்டவரும், வ்யாக்ரபாதரால் அர் ப்பணிக்கப்பட்ட புஷ்பத்தை உடையவரும், உடுக்கு வாசித்தலால் அறிவிக்கப்பட்ட எல்லா கலைகளையும் உடையவரும், எல்லா வேதங்களாலும்  கூறப்படும் ரஹஸ்ய ஸ்வரூபத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கிய ங்களை அளிக்க வேண்டும்.

11. சிவதமனந்த பதான்வித
ராமஸுதீக்ஷித ஸத்கவி பத்யமிதம்
நடனபதேரதி துஷ்டிகரம்
பஹுபாக்யதமீப்ஸித ஸித்திகரம்!
படதி ஸ்ருணோதி ச பக்தியுதோ
யதி பாக்ய ஸம்ருத்திமதோலபதே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

மங்களத்தைக் கொடுப்பதும், அனந்தராம தீக்ஷிதரால் செய்யப்பட்டதும், நடராஜாவிற்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடியதும், எல்லா பாக்யத்தையும்  அளிக்கக்கூடியதும், விரும்பிய ஸித்தியை கொடுக்கக்கூடியதுமான இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் எவர் படிப்பரோ, கேட்பரோ அவர் நிரம்ப  பாக்கியத்தை அடைவார். உலகிற்கு நாயகனும் மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்கவேண்டும், நிரம்ப பாக்கிய ங்களை அளிக்க வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar