Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஜ்வாலாமாலினி வழிபாடு!
ஜ்வாலாமாலினி வழிபாடு!
ஜ்வாலாமாலினி வழிபாடு!

ஜ்வாலாமாலினி, தகதகக்கும் நெருப்பு போன்ற ஜ்வலிக்கும் திருமேனியழகு கொண்டவள். மாணிக்க மகுடம் தாங்கிய அழகிய ஆறுமுகங்கள், அறுமுகத்திலும் மும்மூன்று விழிகள்; பன்னிரண்டு கரங்கள். இடது திருக்கரங்களில் பாசம், கேடயம், வில், தாமரை, சூலம், வரத முத்திரை ஆகியவையும் அங்குசம், வாள், கதை, அக்னி, அம்பு, அபயமுத்திரை ஆகியன வலக்கரங்களிலும் துலங்க நெருப்பின் நடுவே வீற்றிருந்து உலகைக் காக்கிறாள்.

ஜ்வாலாமாலினி என்றால், நெருப்பையே மாலையாக அணிந்தவள் என்று பொருள்! பக்தர்களுக்கு அருளையும் தீயவர்களுக்கு பயத்தையும் தருபவள். நெருப்பு வடிவில் விளங்கும் அம்பிகையை தாமக்னிவர்ணாம் என்று வேதம் போற்றுகிறது. லலிதோபாக்யானத்திலும் இவளுக்கு சிறப்பான இடம் உண்டு. பண்டாசுரனுடன் அன்னை லலிதை போர் செய்தபோது, வெற்றி தோல்வி யாருக்கு என புரியாத நிலை உருவானது. போர் தர்மத்தை மீறி பண்டனின் மந்திரி விஷங்கன் இருளில் போர் புரிந்தான்.

அக்ஞான வடிவான எதிரிகளை உள்ளே நுழையாமல் தடுக்க, ஞானவடிவான அக்னியால் கோட்டை அமைக்க தீர்மானித்தாள் தேவி. அதில் பிரவேசிக்க முனைந்தால் எரிந்து சாம்பலாக வேண்டியதுதான். எனவே, யுத்த களத்தைப் பிரகாசப்படுத்தும்படி திதி நித்யா தேவியருள் இருவரான வஹ்னிவாசினிக்கும், ஜ்வாலாமாலினி தேவிக்கும் கட்டளையிட்டாள். அதன்படி எதிரிகளின் சேனைகள் உள்ளே நுழைய முடியாதபடி, அக்னி ஜ்வாலையுடன் கூடிய அக்னி பிராகாரம் அமைத்தாள் ஜ்வாலாமாலினி. ஜ்வாலா மாலினிகா க்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகா என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.

எதிரி வர்க்கங்களை அழிப்பது ஒரு வகை என்றால், எதிரிகள் தன் பக்கமே நெருங்காமல் தடுப்பது ஒரு வகை. அப்படி தன் பக்தர்களிடம் தீமை ஏதுமே நெருங்க முடியாதபடி காப்பவள் ஜ்வாலாமாலினி. ஜ்வாலாமாலினியின் பக்தர்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். புறப் பகைவர்கள் மட்டுமல்லாது நம்முள்ளேயே இருந்து நம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் பொறாமை, கோபம், பேராசை போன்ற எதிரி வர்க்கங்களையும் ஜ்வாலாமாலினி பொசுக்கி விடுவாள்.

எதிரி என்றும் பகை என்றும் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணம் அஞ்ஞானம். அறியாமை எனும் இருள் நம்மைச் சிந்திக்க விடாது; குரோதமும் கோபமும் அஞ்ஞானத்தின் பிள்ளைகள். இவற்றுக்கு இடம் கொடுத்தால் வாழ்வே இருள் மயமாகி விடும். ஆனால், அக்னியோ என்றும் ஞான ஸ்வரூபம். இந்த அக்னியின் ஒளி வந்தால் மட்டுமே இருள் விலகும், அதுதான் ஜ்வாலாமாலினியின் பணி!

எதிர்பார்ப்பில்லாமல் இவளை உள்ளார்ந்த பக்தியுடன் வணங்கி வந்தால், எதிர்பாராத தருணத்திலெல்லாம் வாழ்வில் வளங்களை அள்ளிக் கொடுப்பாள். செல்வ வளத்துக்கும் பண வரவுக்கும் ஒரு குறைவும் வராது. இவளை வணங்குவதால் ஆகர்ஷண, வச்ய, ஆவேச சித்திகள் அனாயாசமாக உண்டாகும். செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பது போல, எங்கும் இவர்கள் பேச்சுக்கே மதிப்பு இருக்கும். பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் தலைமைப் பொறுப்பேற்கவும், அனைவரையும் தன் சொல்படி கேட்க வைக்கவும் ஜ்வாலா மாலினியின் அருளால் முடியும். இந்த தேவியை பக்தியோடும் முறையான வழியிலும் வணங்குவோர்க்கு சகல சித்திகளும் உண்டாகும்.

ஜ்வாலாமாலினி நித்யாவுக்கான அர்ச்சனை:

ஓம் ஜ்வாலின்யை நம:
ஓம் மஹாஜ்வலாயை நம:
ஓம் ஜ்வாலாமாலின்யை நம:
ஓம் மஹோஜ்வலாயை நம:
ஓம் த்விபுஜாயை நம:
ஓம் ஸெளம்யவதனாயை நம:
ஓம் ஞான புஸ்தக தாரிண்யை நம:
ஓம் கபர்தின்யை நம:
ஓம் க்ருதாப்யாஸாயை நம:
ஓம் ப்ரஹ்மாண்யை நம:
ஓம் ஸ்வாத்ம வேதின்யை நம:
ஓம் ஆத்ம ஞானாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் நந்தாயை நம:
ஓம் நந்தின்யை நம:
ஓம் ரோம ஹர்ஷிண்யை நம:
ஓம் காந்த்யை நம:
ஓம் கால்யை நம:
ஓம் த்யுத்யை நம:
ஓம் மத்யை நம:
ஓம் பிஷயேச்சாயை நம:
ஓம் விச்வகர்பாயை நம:
ஓம் ஆதார்யை நம:
ஓம் ஸர்வபாவின்யை நம:
ஓம் காத்யாயன்யை நம:
ஓம் காலயாதாயை நம:
ஓம் குடிலாயை நம:
ஓம் அனிமேஷிக்யை நம:
ஓம் மாட்யை நம:
ஓம் முஹூர்தாயை நம:
ஓம் அஹோராத்ர்யை நம:
ஓம் த்ருட்யை நம:
ஓம் கால விபேதின்யை நம:
ஓம் ஸோம ஸூர்யாக்னி மத்யஸ்தாயை நம:
ஓம் மாயாதீதாயை நம:
ஓம் ஸுநிர்மலாயை நம:
ஓம் கேவலாயை நம:
ஓம் நிஷ்கலாயை நம:
ஓம் சுத்தாயை நம:
ஓம் வ்யாபின்யை நம:
ஓம் வ்யோம விக்ரஹாயை நம:
ஓம் ஸ்வச்சந்த பைரவ்யை நம:
ஓம் வ்யோமாயை நம:
ஓம் வ்யோமாதீதாயை நம:
ஓம் பரேஸ்திதாயை நம:
ஓம் ஸ்துத்யை நம:
ஓம் ஸ்தவ்யாயை நம:
ஓம் ந்ருத்யை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் பூஜார்ஹாயை நம:
ஓம் பூஜக ப்ரியாயை நம:

பிரம்மச்சாரிகளுக்குச் செய்யப்படும் வடு பூஜையிலும் பெண் குழந்தைகளுக்குச் செய்யப்படும் கன்யா பூஜையிலும் மிகுந்த சந்தோஷம் கொள்பவள் ஜ்வாலாமாலினி. இந்த பூஜைகளில் ஜ்வாலாமாலினி தேவியை ஆவாஹனம் செய்து பூஜிப்பதால்-கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களில் நடந்த, நடக்கப்போகும் சம்பவங்களைக் குறித்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

இவளை கலசத்தில் ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்து அந்த கலச ஜலத்தை அருந்துவதால், தீராத வயிற்று நோய்கள், மூலம் போன்றவை மறையும்.

இந்த தேவியை தினமும் வழிபட்டால் தடைப்பட்ட வேலைகள் முடியும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

ஜ்வாலாமாலினி நித்யாவுக்கான பூஜை: முதலில் லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.

யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ:கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்று கூறி, லலிதா தேவியின் படத்துக்கோ யந்திரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம் குங்குமத்தால் பொட்டு இடவும். பின்னர் அன்றைய நித்யாவான ஜ்வாலாமாலினி நித்யாவை அவளது யந்திரத்திலோ படத்திலோ தியானிக்கவும்.

யா ஜாதவேதோஜ்வலஜ் ஜ்வலினீச பூத
ஸம்ஹாரிணி ப்ரஜ்வலமாலயாட்யாம்
தாமக்னி ரூபாம் பரதேவதேவீம்
ஒளகார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்

என்றுகூறி. ஜ்வாலாமாலினி நித்யா தேவியின் படத்துக்கோ யந்திரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தன குங்குமத்தால் பொட்டு வைக்கவும்.

மேற்கூறிய நாமாவளியால் தேவிக்கு உகந்த செவ்வரளி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, தூபம் தீபம் காட்டவும். சத்துமா, தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு சமர்ப்பிக்கவும். பின்னர் தேவியின் காயத்ரியைக் கூறி கற்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.

ஜ்வாலாமாலினி தேவிக்கு உகந்தவை:

நாட்கள் : வளர்பிறை சதுர்த்தசி தேய்பிறை த்விதியை
புஷ்பம் : செவ்வரளி
நைவேத்யம் : சத்துமா

ஜ்வாலாமாலின்யை வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

என்பது இவளது காயத்ரி மந்திரம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar