Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்), நீலகண்டேஸ்வரர்
  அம்மன்/தாயார்: வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி), அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை
  தல விருட்சம்: வெள்ளெருக்கு
  தீர்த்தம்: கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம்
  புராண பெயர்: எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர்
  ஊர்: இராஜேந்திர பட்டினம்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

மறையான் நெடுமால் காண் பரியான் மழுவேந்தி நிறைய மதிசூடி நிகழ்முத் தின்றொத்தே இறையான் எருக்கத்தம் புலியூர் இடங்கொண்ட கறையார் மிடற்றானைக் கருதக்கெடும் வினையே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 4வது தலம்.
 
     
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  மார்ச் 16 முதல் 20 வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. திருநீலகண்டநாயனார் அவதரித்த தலம். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 215 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்) கோயில், எருக்கத்தம்புலியூர், இராஜேந்திர பட்டினம் -608 703 . கடலூர் மாவட்டம் .  
   
போன்:
   
  +91- 4143-243 533, 93606 37784 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர். உடனே அனைவரையும் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடுங்கள்'' என கூறிமறைந்தார். எனவே இவ்வூர் எருக்கத்தம்புலியூர் ஆனது.

மூலவர் திருக்குமாரசாமி, சுவேதார்க்வனேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  பேச்சில் குறைபாடு உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ராஜராஜ சோழன் புத்திரபாக்கியம் வேண்டி இத்தல ஈசனை வணங்கினார். அதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தான். இதனால் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது.

சுவேதன் என்ற அரசனுக்கு முன்வினைப்பயனால் வெண்குஷ்டம் ஏற்பட்டது. சிவபக்தனான இவன் எருக்கத்தம்புலியூர் தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்து, நோய் நீங்கப் பெற்றான். எருக்கிற்கு வெண்குஷ்டத்தைப் போக்கும் சக்தியுண்டு.

மார்ச் 16 முதல் 20 வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. அறிவில் சிறந்த முருகப்பெருமானுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.
 
     
  தல வரலாறு:
     
  கைலாயத்தில் சிவன் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்து கொண்டிருந்தார். பார்வதி அதை சரியாக கவனிக்காததால், அவளை பரதவர் குல பெண்ணாக பிறக்குமாறு சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார்.

இக்குற்றத்திற்காக சிவன் முருகனை, மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். முருகன் மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு "உருத்திரசன்மர்' என்ற பெயரில் அவதரித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.

கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் "குமாரசாமி' ஆனார். உருத்திரசன்மரின் உருவம் இங்கிருக்கிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மார்ச் 16 முதல் 20 வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar