Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு பூவனாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பூவனாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பூவனாதர்
  அம்மன்/தாயார்: செண்பகவல்லி
  தல விருட்சம்: களா மரம்
  தீர்த்தம்: அகத்தியர்
  புராண பெயர்: கோவிற்புரி (மங்கைநகர்)
  ஊர்: கோவில்பட்டி
  மாவட்டம்: தூத்துக்குடி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வசந்த உற்சவம் வைகாசி 10 தினங்கள். அம்பாள் ‌‌வளைகாப்பு உற்சவம் (ஆடிப்பூரம்) அம்பாளுக்கான சிறப்புத் திருவிழா. நவராத்திரி புரட்டாசி 10 தினங்கள். திருக்கல்யாணத் திருவிழா 12 நாள் பெருந்திருவிழா. சித்திரைத் தீர்த்தம் தமிழ் புத்தாண்டு தினம். இந்த முக்கிய விழாக்கள் தவிர ‌பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ‌கொள்வர்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு செண்பகவல்லி பூவனாதர் திருக்‌கோயில் கோவில்பட்டி-628501, தூத்துக்குடி மாவட்டம்  
   
போன்:
   
  +91 4632 2520248 
    
 பொது தகவல்:
     
 

அருள் தரும் அம்பிகை செண்பகவல்லி அம்பாள் 7 ஆடி உயரத்தில் எழில் ‌‌கொஞ்சும் தோற்றத்துடன் காட்சி தருகிறார்.


கிழக்குப் பார்த்தபடி இறைவனும் இறைவியும் காட்சி தரும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. பஞ்சமுக விநாயகர், சண்முகர், துர்கை, கன்னி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரும் தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். அகத்திய முனிவர் உருவாக்கிய அகத்திய தீர்த்தம் இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று.


 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு தீராத பிணி தீரும். மனம் போல் மணவாழ்க்கை அமையும், குறைவில்லா குழந்தை பேறு கிடைக்கும். விவசாய ‌செழிப்பு,வியாபார விருத்தி ஆகியவற்றுக்காவும் இத்தலத்தில் வேண்டிக்‌‌கொள்ளலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  செண்பகவல்லி அம்பாளுக்கு விளக்கு போடுதல், அம்பாளுக்கு புடவை சாத்துதல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். சுவாமிக்கு பால், சந்தன அபிசேகம் செய்தல், வேஷ்டி படைத்து ‌நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இவற்றோடு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  மது‌‌ரையில் எப்படியோ அதுபோல் இங்கு அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சன்னதி நு‌ழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் காணப்படுகின்றனர். மூல விக்ரகம் எப்படியுள்ள‌தோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள். இராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடையது. சதுங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்கள் இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இறைவன் பூவனநாதர் என பெயர் பெற்றார்.  
     
  தல வரலாறு:
     
  ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகைச் சமன்செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை நோக்கிப் பயணமானார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகிய‌ேரை வதைத்தனால் உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். வெள்ளிமலை சிவக்குழவைச் சார்ந்த வாமனன் நந்திதேவரின் சாபத்தால் வெம்பக்‌ கோட்டையில் ‌வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். உள்ளமுடையான் ( ஒளி நூற் புலவர் கி.பி.1029க்கு முற்பட்டவர்) என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.