Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜப்பெருமாள்
  அம்மன்/தாயார்: பெருந்தேவி
  தல விருட்சம்: அரசு
  தீர்த்தம்: வைகை
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  ஊர்: எமனேஸ்வரம்
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசியில் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி.  
     
 தல சிறப்பு:
     
  வைகை நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. மூலவர் வரதராஜர், புண்ணியகோடி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமான தரிசனம் மிக விசேஷமானது.இக்கோயி லுக்குச் செல்பவர்கள் முதலில் விமானத்தை தரிசித்து விட்டு, அதன்பின்பு சுவாமியை தரிசிக்கிறார்கள். இதனால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், எமனேஸ்வரம் - 623 701. பரமக்குடி,ராமநாதபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4564 - 223 054. 
    
 பொது தகவல்:
     
  இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் எனப்படும். பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி, கோயிலுக்கு வெளியே காவல் தெய்வம் கருப்பணசுவாமிக்கும் சன்னதிகள் இருக்கிறது. மார்க்கண்டேயரை பிடிக்கச்சென்று, சிவனால் பதவியை பறிக்கப்பட்ட எமதர்மன், வழிபட்ட எமனேஸ்வரமுடையார் கோயில் இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண, புத்திர பாக்கியம் கிடைக்க சுவாமியிடம் வேண்டிக் கொள்கிறாகள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமியை வேண்டி நேர்த்திக்கடன் நிறைவேறியவர்கள் விசேஷ திருமஞ்சனம் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  வைகாசியில் பிரம்மோற்ஸவம் கொண்டாடுகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அமைப்பில் அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். மூன்றாம் சனிக்கிழமை மட்டும் சுவாமி, வைர அங்கி அணிந்து காட்சி தருவார். எனவே இவருக்கு, "திருப்பதி பெருமாள்' என்ற பெயரும் உண்டு.வைகாசி பவுர்ணமியன்று சுவாமி புஷ்பப்பல்லக்கில் எழுந்தருளி, கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்குகிறார். அதன்பின், குதிரை வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து விமோசனம் தருகிறார். இந்த வைபவம் இங்கு மிக விமரிசையாக நடக்கும்.சித்திரைப் பிறப்பு மற்றும் ஐப்பசி வளர்பிறையில் வரும் நாகபஞ்சமியன்று, சுவாமி கருடசேவை சாதிக்கிறார்.

சிறப்பம்சம்: தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சன்னதிக்குப் பின்புறத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறது. சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன், அக்னி கிரீடத்துடன் காட்சி தருகிறார்.வரதராஜரை இங்கு பிரதிஷ்டை செய்யும் முன்பு, இத்தலத்தில் இருந்த சீனிவாசப்பெருமாள், அலர்மேலு தாயாருடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரையும் மூலவராகவே பாவித்து பூஜை செய்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  முற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், தான் ஓரிடத்தில் கால்வாய்க்குள் சிலை வடிவில் இருப்பதாக உணர்த் தினார்.மகிழ்ந்த பக்தர் மறுநாள் அங்கு சென்றபோது, சுவாமியைக் கண்டார். அவரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.சுவாமிக்கு "வரதராஜப்பெருமாள்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. பின்பு படிப்படியாக இங்கு கோயில் பெரிதாக கட்டப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வைகை நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. மூலவர் வரதராஜர், புண்ணியகோடி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமான தரிசனம் மிக விசேஷமானது.இக்கோயி லுக்குச் செல்பவர்கள் முதலில் விமானத்தை தரிசித்து விட்டு, அதன்பின்பு சுவாமியை தரிசிக்கிறார்கள். இதனால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.