Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீனிவாச பெருமாள்
  உற்சவர்: ஸ்ரீனிவாச பெருமாள்
  அம்மன்/தாயார்: பத்மாவதி தாயார்
  தீர்த்தம்: கிணறு
  புராண பெயர்: உடையாம்பாளையம்
  ஊர்: உடையாம்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி மாதங்களில் சனிக்கிழமை விழாக்கள் மிக சிறப்பாக கொண்டாப்படுகின்றன. அன்றைய தினங்களில் காலை அபிேஷகங்களும், பூஜைகளும், பந்தசேவை, கவாலம் உள்பட கருட வாகனத்தில் முதியா ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாருடன் திருவீதி உலா உண்டு. கிருஷ்ண ஜெயந்தி விழாவும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ கண்ணன் ஜெனனம், ஊஞ்சல் உற்சவம், உரியடி நிகழ்ச்சி, பஜனை நிகழ்ச்சி ஆகியவை உண்டு. இவை தவிர ஆடிமாத வெள்ளிக்கிழமை பூஜைகளும் உண்டு. அன்று, சக்தி கரகம் அழைத்தல், உச்சி கால பூஜை, சாமி அழைத்தல், அன்னதானம் ஆகியவை உண்டு. மேலும், தனி சன்னதியில் உள்ள முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல், அபிேஷக பூஜை, முதியா குல பெண்கள் மாமன் சீர் செய்யும் முறை ஆகியவை உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  முதியா என்ற சொல்லுக்கு மூன்று தலைமுறை தழைக்கும் என்பது ஐதீகம். இப்படி தேவர் சமூகத்தில் அகமுடையார் பிரிவில் உள்ள முதியா குல மக்களுக்கு சொந்தமான கோயில்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 6 மணி முதல் 8 மணி வரை மாலை: 5 மணி முதல் 8 மணி வரை 
   
முகவரி:
   
  முதியா ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் கோயில், தொட்டிச்சியம்மன் கோயில் வீதி, உடையாம்பாளையம், கோயம்புத்தூர் - 641028  
   
போன்:
   
  +91 94430 60273, 98431 65956, 98944 52965  
    
 பொது தகவல்:
     
  முதியா ஸ்ரீ  ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் அருள்பாலிக்கிறார். ஆஞ்நேயர், முனியப்பன், வீரமாட்சி ஆகியோருக்கு தனி சன்னதி உண்டு. விக்னேஷ்வரர், ஆதி முனியப்பன், கன்னிமார், கருடாழ்வார், தீபகம்பம் உள்பட கோயில் வளாகத்தில் தசவதாரப் பெருமாள்கள் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீஜெயன், ஸ்ரீவிஜயன், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஆண்டாள் ஆகிய துாவரபாலகர்களும் உண்டு 
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை, குழந்தை பாக்கியம், உடல்நலன், தொழில் வளர்ச்சி உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  விழாக்காலங்களில் அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், அங்கவஸ்திரம் சாத்துதல், அம்மனுக்கு புடவை வழங்குதல், பிரசாதம் வழங்குதல், அன்னதானத்தில் பங்களிப்பு என பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்ட கோயில் என்ற தலபெருமை கொண்டது.  
 
     
  தல வரலாறு:
     
  நாயக்கர் ஆட்சி காலத்தில் சேர நாடு (இன்றைய கேரளம்) நோக்கி படை எடுத்து சென்ற போது தென் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, நொய்யல் ஆற்றங்கரையில் வெள்ளலுார் பகுதியில் குடியமர்த்தப்பட்ட தேவர் சமுதாய மக்கள் இவர்கள். இவர்கள் போர் வீரர்கள் மற்றும் அரசவை உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ளனர். ஆற்றங்கரை ஒட்டிய பகுதியில் வெத்திலை வியாபாரம் செய்ததால் இவர்கள் வெத்தலை கொடி தேவர் என அழைக்கப்பட்டனர். பொதுவாக வெத்திலை கொடி விவசாயத்தில் ஒரு வருடத்திற்கு ஒரு முறை வெத்திலை கொடி பந்தல் அகற்றப்பட்டு, புதிய பந்தல் அமைக்கப்பட்டு பறிப்பு நடக்கும். ஆனால் இந்த முதியா சமூகத்ததை சேர்ந்தவர்கள் வெத்திலை கொடி வளர்த்தால் மூன்று ஆண்டுகள் தொடந்து விவசாயம் செய்யலாம். இதனால் இவர்களுக்கு முதியா என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. இவர்கள் வெள்லுாரிலிருந்து தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்த இவர்கள் உடையாம்பாளையம் பகுதியில் குடியேறிய அங்கு கட்டப்பட்ட கோயில் இது. முன்பு சிறிய கட்டிடமாக இருந்த கோயில் பின்பு ஆன்றோர்கள் மற்றும் பக்தர்கள் முயற்சியால் வைகாசி மாதம் 2010ம் ஆண்டு பெரிய கோயிலாக உருவெடுத்து, அப்பகுதியில் சிறப்புடன் விளங்குகிறது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar