Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்துமாரியம்மன்
  உற்சவர்: முத்துமாரியம்மன்
  அம்மன்/தாயார்: முத்துமாரியம்மன்
  தீர்த்தம்: கிணறு தீர்த்தம்
  புராண பெயர்: தண்ணீர்பந்தல்
  ஊர்: பீளமேடு
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை திருவிழா பத்து நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்களில் கணபதி ேஹாமத்தில் துவங்கி, பூச்சாட்டுதல், பெரிய கம்பம் நடுதல், பால் குடம் எடுத்தல், அம்மனுக்கு அபிேஷகம், அணிக்கூடை எடுத்து வருதல், அம்மன் அழைப்பு, சக்தி கரகங்கள் எடுத்தல், திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு எடுத்தல், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா, மறு பூஜை, அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சிகள் என விழா சிறப்புடன் நடக்கும். மேலும் ஆடிவெள்ளி, மார்கழி, கிருத்திகை, பெளர்ணமி, அமாவாசை பூஜைகளும் உண்டு. பிரதி மாதம் அமாவாசை தினங்களில் மதியம் அன்னதானம் உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  தண்ணீர் பந்தல் பகுதியில் முதன் முதலில் தோன்றிய கோயில் என்ற சிறப்பு பெற்றது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 6 மணி முதல் 12 மணி வரை மாலை: 5 மணி முதல் 8.30 மணி வரை. 
   
முகவரி:
   
  ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன் கோயில் விளாங்குறிச்சி ரோடு, தண்ணீர் பந்தல், பீளமேடு, கோயம்புத்தூர்- 641004  
   
போன்:
   
  +91 70926 34926  
    
 பொது தகவல்:
     
  மூலவர் முத்துமாரியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கன்னி மூல கணபதி, பால முருகன் கிழக்கு திசையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். ஆதி விநாயகர் மற்றும் சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, எலி வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம், சக்தி வேல், பலிபீடம், நவகிரக சன்னதி ஆகியவை உண்டு  
 
     
 
பிரார்த்தனை
    
  பீளமேடு தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் தொழில் வளர்ச்சிக்காக அதிக பிராத்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.        
 
    
நேர்த்திக்கடன்:
    
  மாத, மாதம் அம்மாவாசை தினத்தில் நடக்கும் அன்னதான விழாவில் பக்தர்கள் உணவழித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். மேலும், திருவிழா காலங்களில் அம்மனுக்கு, புடவை அளித்தல், விநாயகர், முருகனுக்கு அங்க வஸ்திரம் சாத்துதல், சக்தி கரகங்கள் எடுத்தல், மாவிளக்கு, பூவோடு எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.  
    
 தலபெருமை:
     
  தண்ணீர் பந்தல் பகுதியில் குடியிருப்புகள் உருவான போது, அப்பகுதிக்கு தாகம் தணித்த அம்மன் என்ற பெருமை பெற்ற தலம்.
 
     
  தல வரலாறு:
     
  பீளமேடு பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் உருவான போது, அதை ஒட்டி அதன் பின்புறம் இருந்த வனபகுதியில் புதிய குடியிருப்புகள் உருவாக துவங்கின. அன்றைய விளாங்குறிச்சி பகுதியில் இயங்கிய மில்லுக்கு, பீளமேடு பகுதியிலிருந்து செல்லும் தொழிலாளர்களுக்கு, செட்டியார் ஒருவர் தண்ணீர் பந்தல் அமைத்து, ஓய்வு மண்டபமும் அமைத்து கொடுத்தார். அப்படி தண்ணீர் பந்தல் அமைத்திருந்த பகுதியே பின்னாளில் தண்ணீர்பந்தல் என்ற ஊர் உருவாக காரணமாக அமைந்தது. அப்படி துவங்கிய பகுதியில் விளாங்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில், 1972ம் ஆண்டு சிறிய மேடையாக இளைஞர்கள் கோயில் அமைத்து, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட சுயம்புவை அம்மனாக இங்கு வைத்து வழிபட்டனர். அந்த இடம் தனியார் ஒருவருக்கு சொந்தமானதாக இருந்ததால் அவர் போலீஸ் புகாரின் பேரில் வேறு இடம் மாற்றப்பட்டது. பின் ஊரில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வற்றிக்கிடந்த கிணறு ஒன்றின் அருகே 1984ம் ஆண்டு சிறிய மூலவர் மண்டபம் அமைக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் அமைத்து அங்கு பூஜை நடந்து பின் அருகில் இருந்த கிணற்றில் தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்தது. இது இந்த அம்மனின் சக்தியால்தான் என்ற புகழ் எங்கும் பரவ இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. உடனே அன்றைய விளாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு அரசே, இக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து பொதுமக்கள் வழங்க, குடிநீர் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவியது. 1973 ம் ஆண்டு முதல் சித்திரை திருவிழா மிக சிறப்பாக கொண்டாட துவங்கி இன்று வரை நடந்துவருகிறது. பின் 2013ம் ஆண்டு பக்தர்கள், பொதுமக்கள், தொழில் அதிபர்கள் என பலரின் பங்களிப்போடு மற்ற விநாயகர், முருகன் என உப தெய்வங்களும் அமைக்கப்பட்டு பெரிய கோயிலாக உருவெடுத்து கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தண்ணீர் பந்தல் பகுதியில் குடியிருப்புகள் உருவான போது, அப்பகுதிக்கு தாகம் தணித்த அம்மன் என்ற பெருமை பெற்ற தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar