Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு முருகன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு முருகன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முருகன் (திருக்குராத்துடையார்)
  தல விருட்சம்: குரா மரம்
  தீர்த்தம்: சரவண தீர்த்தம், கங்கை கிணறு
  புராண பெயர்: திருக்குராவடி
  ஊர்: திருவிடைகழி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசத்தின் போது, சுவாமிமலையிலிருந்து நடைபயணமாக வருவது பெரிய திருவிழாவாக நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு தான் முருகன், தெய்வானைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதை வெளிப்படுத்தும் விதத்தில் தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல உள்ளது சிறப்பு. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.  
   
முகவரி:
   
  அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவிடைகழி-609310 நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
   
    
 பொது தகவல்:
     
  ஏழுநிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. ஆறடி உயரத்தில் முருகன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். சுவாமியின் வலதுகை அபயம் தரும் விதத்திலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  தீராத பழி நீங்க, மனத்தெளிவு பெற, சிறந்த அறிவு பெற,திருமணத்தடை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  விருப்பம் நிறைவேற பக்தர்கள் பால், பன்னீர் காவடிகளை முருகனுக்கு செலுத்துகின்றனர். திருமணத்தடை நீங்க புரட்டாசி, வைகாசி மாதத்தில் சிக்கல், சிதம்பரம் பகுதியில் இருந்து நடைப்பயணமாக யாத்திரை வருவர்.  
    
 தலபெருமை:
     
  சிவனுடன் முருகன்: கருவறையின் உட்புறத்தில் ஒரு சிவலிங்கமும், முருகனுக்கு முன்புறம் ஒரு ஸ்படிக லிங்கமும் உள்ளது. முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவவிமோசன சுவாமியாக அருள்கிறார். திருச்செந்துாருக்கு நிகரான இவரை தரிசிக்க தீராப்பழியும் தீரும்.

தலவிருட்சமான குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும்.

நிச்சயதார்த்த தலம்: முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை தவம் செய்த தலம் இது. இவரை வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் திருமணத்தடை அகலும். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், சிவனருளால் முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைகழி' எனப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  முருகன் சூரபத்மனை வதம் செய்த பிறகு, அவனது மகன் இரண்யாசுரன் சுறாமீன் வடிவெடுத்து தரங்கம்பாடி கடலில் ஒளிந்தான். சிவபக்தனான அவனை, அன்னை பராசக்தியின் அருள் பெற்று முருகன் கொன்றான். அசுரனாக இருந்தாலும் சிவபக்தன் என்பதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க பராசக்தியின் ஆலோசனைப்படி, முருகன் இத்தலத்திலுள்ள குராமரத்தின் அடியில் சிவனை நோக்கி தவமிருந்து பலனடைந்தார். குராமர நிழலில் அமர்ந்து சிவனை வழிபட்டதால் 'திருக்குராவடி' என இத்தலத்திற்கு பெயர் வந்தது. தரிசிப்போரின் பழி, பாவம் போக்கும் இத்தலமுருகனை, 'திருக்குராத்துடையார்' என கல்வெட்டுகள் கூறுகின்றன.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தான் முருகன், தெய்வானைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதை வெளிப்படுத்தும் விதத்தில் தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல உள்ளது சிறப்பு.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.