Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கயிலாசநாதர்
  அம்மன்/தாயார்: காமாட்சியம்மன்
  தல விருட்சம்: வில்வம், வேம்பு, அரசும்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகியது. அப்பகுதியில் அண்ணாமலை பல்கலைக்கழ இணைவேந்தர் பெயரில் நகர் அமைத்தமையால் முத்தையா நகர் என அழைக்கப் படுகிறது.
  ஊர்: சி.கொத்தங்குடிசு
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம், நகராத்திரி உள்ளிட்டவை முக்கிய திருவிழாக்களாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், அண்ணாமலை நகர் அஞ்சல், சிதம்பரம் வட்டம், முத்தையா நகர்–சி.கொத்தங்குடி, கடலூர்-608002.  
   
போன்:
   
  +91 94435 38084, 78715 65728 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப்பக்கம் வாயில், நுழைவு வாயில் முன் வேம்பு, அரசன் மற்றும் வில்வம் தல விருட்சம் மரம் உள்ளது. மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். தெற்குப் பக்கம் பார்த்து அம்பாள் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் பலி பீடம் மற்றும் நந்தி மேற்கு பக்கம் தலை சாய்ந்த நிலையில் படுத்துள்ளது. கிரானைட் தரை தளம், வலது பக்கம் சுப்பிரமணியர், இடபக்கம் விநாயகர் அருள்பாலிக்கின்றனர். உள்பிரகாரத்தில் கயிலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஈசன் அருள்பாலிக்கின்றார். வெளிபிரகாரத்தில் தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் நந்தி வணங்கும் கோலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியும், வடக்கு பக்கம் பார்த்த வகையில் விஷ்ணு துர்க்கையும், தெற்கு பக்கம் பார்த்த வகையில் சண்டிகேஸ்வரரும், அவரை வணங்கி சென்றால் நவக்கிரகங்களை வணங்கி சென்றால் கோயில் நுழைவு வாயிலை சென்றடையலாம்.  
     
 
பிரார்த்தனை
    
  கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விளங்குவதால் பக்தர்கள் ஏராளமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  நெய் தீபம், பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் 2 கி.மீ.,தொலைவில் உள்ளது. மேலும் இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, காயிலாயத்தில் இருந்து மூலவரை காணிக்கையாக வழங்கி 2010 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், க்ஷ விஜயந்திர சரஸ்வதி சங்கராச் சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தியது பெருமைக்குரியதாக அமைந்துள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  நகரில் 1995 புதியதாக கட்டப்பட்ட செல்வ முத்துவிநாயகர் கோயில் 2008 இல் கும்பாபிஷேகம் நடத்த நகர் வளர்ச்சிகுழுத் தலைவரும், ஊராட்சித் தலைவருமான கண்ணன் வேணுகோபால் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில்  தற்போதுள்ள விநாயகர் கோயில் தவிர சிவன் கோயில்  அமைக்கவும், விநாயகர் கோயிலை புரணமைத்து கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் ரூ.16 லட்சம் செலவில் கைலாசநாதர்,  காமாட்சியம்மன், கஜலட்சுமி, வினாயகர், முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வ மூர்த்திகளுடன் புதிய கோயில் கட்டப்பட்டது.

கோயில் கட்ட முதற்கட்டமாக பூஜ்ய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்ரீசரணர்கள் அனைத்து தெய்வமூர்த்தி சிலைகளையும்  இவலசமாக வழங்கி, பொருளாதார வசதி அமோகமாக வர்சிக்க வேண்டுமாய் அருளாசி வழங்கினர். அவர்களின் ஆசிபடி வெகு விரைவில் நடந்தேறியது. செல்வந்தர்கள் பலர்  தானே முன்வந்து நன் கொடை வழங்கிய நிலையில், நிர்வாக குழுத்தலைவர் கண்ணன்வேணுகோபால் தன் சொந்த வருவாய் பல செலவிட்ட நிலையில், செயலர் பழனியப்பன் தன் பங்கிற்கு உதவியுள்ளார். கோயில் இதர செலவினங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் உரியத்தொகை இறைவன் ஈசன் அருளால் விரைவில் கிடைக்க கோயில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் 2010 ஜூன் 10ம் தேதி திரயோதசி திதியும், அனுஷ நட்சத்திரமும், சித்தயோகமும், சாத்யயோகமும் கூடிய சுபயோக தினத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தி வைத்தனர்.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar