Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மங்கள ரங்கநாத பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மங்கள ரங்கநாத பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மங்கள ரங்கநாத பெருமாள்
  அம்மன்/தாயார்: மங்களஸ்ரீதேவி, மங்களபூதேவி
  புராண பெயர்: சீதை சென்று தங்கிய மங்கலம், சீதக்கமங்களம்
  ஊர்: சீதக்கமங்கலம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
திறக்கும் நேரம்:
    
 காலை 8மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மங்கள ரங்கநாத பெருமாள் திருக்கோயில், சீதக்கமங்கலம், சேங்காலிபுரம் வழி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்  
   
போன்:
   
  +91 8526143390 
    
 பொது தகவல்:
     
  ராஜகோபுரமே மூலஸ்தான விமானமாக அமைய, அதன் கீழ் மங்கள ரங்கநாதரின் கருவறை அமைந்திருப்பது ரங்கமணி கோபுரம் எனப்படும். இதுவும் மிகவும் விசேஷமானதாகும். இந்த அமைப்பில் உள்ள கோயில்கள் மிகவும் அரிது.
 
     
 
பிரார்த்தனை
    
  தம்பதியரிடையே ஒற்றுமை, குடும்பத்தில், நிம்மதி, மணப்பேறு மகப்பேறு முதலான பாக்யங்களை கிட்டச் செய்யும் என்பது ஐதிகம். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  ஊர் பெயரிலேயே மங்களம் இருப்பதாலும், (மங்களன் - செவ்வாய் பகவான் -பூமிகாரன்) பெருமாளும் மங்கள ஸ்ரீதேவி - மங்கள பூதேவி உடனுறை மங்கள ரங்கநாதப் பெருமாளாக இருப்பதாலும் மயன், விஸ்வகர்மா போன்றோர் வழிபட்ட தலம் ஆதலாலும் இது சிறந்த வாஸ்து பரிகாரத் தலமாக விளங்குகிறது. அரங்கனின் முன் அமர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் அவரை வணங்கும் காட்சி மிக அபூர்வமானது. இத்தகைய அமைப்புள்ள தெய்வத்தலத்தில் வணங்குவது, இத்தலம், வந்து அரங்கனை ஆராதித்து அவரது தீர்த்தப் பிரசாதத்தினை உட்கொள்வது அருமருந்தாகத் திகழ்ந்து, பிணியாவும் தீர்க்கும் என்பது நம்பிக்கை.
 
     
  தல வரலாறு:
     
  துயில் கொண்டால் கனவு வரும், அரிதுயில் கொள்ளும் அரங்கன், கனவில் எழுந்தருளி தனக்குக் கோயில் கட்டச் சொன்னது தெரியுமா சீதாதேவி பூமியில் தோன்றி, பூமிதேவியின் மடியிலேயே சென்று மறைந்தாள் என்பது தெரியும். அந்த சம்பவத்திற்குத் தொடர்புடையத் தலம், பூரண வாஸ்து பாக்கியம் அருளும் தலம், ஸ்ரீதேவி - பூதேவித் தாயார்கள், பெருமாளின் முன் அமர்ந்து பூஜிக்கும் தலம். இவை அனைத்தும் நிகழ்ந்தது ஒரே தலம் சீதக்கமங்கலம். முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்து ஆனைக்காவில் அரனை பூஜித்த கோட்செங்கட் சோழன் சிவபெருமானுக்கு எண்ணற்ற மாடக்கோயில்கள் அமைத்தான். ஒருநாள் அவன் உறங்கிக் கொண்டிருக்கையில், உறங்காமல் உறங்கும் உலகநாபன் அவன் கனவில் தோன்றினார். மன்னன் கனவில் வீழ்ந்து வணங்கினான். பெருமாள் திருவாய் மலர்ந்தார். சோழ ராஜனே -ஈசனுக்குப் பல கோயில்கள் கட்டிய நீ, எனது ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் திருப்பணிகள் செய்வாயாக. அதோடு, இதே பள்ளிகொண்ட ரூபத்தில் காவிரி வளநாட்டில் எமக்கு ஓர் கோயிலும் அமைப்பாயாக என்று கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு எழுந்தான் மன்னன். ஆஹா, அபார சிவ பக்தி காரணமாக ஹரியை மறந்தேனே. அரிதுயில் கொள்ளும் பரந்தாமனும், ஆனந்தக் கூத்திடும் பரமனும் ஒருவரேயல்லவா? என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் கசிந்தவன், ஸ்ரீரங்கம் கோயிலைச் செப்பனிட்டு கும்பாபிஷேகம் நடத்தினான். அடுத்து தனி கோயிலுமாக, பள்ளி கொண்டப் பெருமாளுக்கு சீதக்கமங்கலத்தில் கோயில் கட்டி குடமுழுக்கு செய்வித்தான். காலங்கள் உருண்டோடின. அன்னியப் படையெடுப்புகளால் சிதிலடைந்து சீரழிந்த ஆயிரக்கணக்கான கோயில்களுள் சீதக்கமங்கலம் பெருமாள் கோயிலும் ஒன்று. ஊர்வாசிகளுக்கே தெரியாத விதத்தில் மண்மூடி, முள் காடுகள் சூழ மறைந்தே கிடந்தார் மாலவர். கண்மூடிப் பள்ளி கொண்டிருந்த காலம் போதும் எனத் தீர்மானித்த அவர், கலியில் மீண்டும் அருள் புரியத் திருவுளம் கொண்டார். முன்பு மன்னராட்சியில் மன்னனின் கனவில் வந்த பெருமாள், இப்போது மக்களாட்சியில் மக்களின் கனவில் வந்து, தான் இருக்கும் இடத்தைத் தெரிவித்து வெளிவரத் திருவுளம் கொண்டார். பணிக்காக வெளிநாடு சென்றிருந்த அவ்வூர்வாசி ஒருவரின் கனவில் தோன்றினார் காகுத்தன். உங்கள் ஊர் காட்டு கருவைப் புதரிலேயே எவ்வளவு நாள் இருப்பது. முட்செடிகளை அப்புறப்படுத்தி, மணல்மேட்டைத் தோண்டி என்னை வெளிக்கொண்டு வா! என்று கட்டளையிட்டார் பெருமான். பலநாள் அதே கனவு தொடரவே, தன் பணியை உதறிவிட்டு ஊருக்கு வந்துசேர்ந்தார் அந்த பக்தர்.

ஊர் பெரியவர்கள், முதியவர்களை விசாரித்து பெருமான் கனவில் சொன்ன கருவக்காட்டைக் கண்டுபிடித்தார். முட்செடிகளை அகற்றி முகுந்தனைத் தேடினார். உலகைப் படைந்த உத்தமனான, உறங்கும் வடிவில் பன்னிரண்டு அடி நீள கருங்கல் திருமேனியராகக் காட்சி தருவதைக் கண்டார். கண்கள் பனிக்க, நெஞ்சம் இனிக்க அச்சிலையை வெளிக்கொணர்ந்தார். வழக்கமாக ஆதிசேஷன் மேல் ஆனந்தமாய் சயனம் கொண்டிருக்கும் திருமாலின் திருவடி அருகே ஸ்ரீதேவி -பூதேவித் தாயார் அமர்ந்து பூஜிப்பர். இங்கோ திருமாலின் முன்பாக அமர்ந்து ஆராதிக்கும் அரிய கோலத்தில் காட்சியளித்தனர். விசேஷமான திருவடிவம் அது எனக்கண்டு அனைவரும் ஆனந்தித்தார்கள். சிறிய கொட்டகை அமைத்து அதில் இருத்தி அவரை ஆராதிக்க ஆரம்பித்தார்கள். கொட்டகையிலேயே எவ்வளவு காலம் இருப்பது? கோயில் திருப்பணி? மீண்டும் ஒரு கனவு. சன்னாநல்லூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் கனவில் வந்த பெருமாள், உன் கணவரின் பூர்வீக ஊரில் உள்ள எனக்கு திருப்பணி ஏற்பாடு செய்து ஊர்மக்கள் ஒத்துழைப்போடு கும்பாபிஷேகம் நடத்துவாயாக என்று பகன்றார். சீதா தேவி தனது அவதார முடிவில், பூமித்தாயின் உள் சென்று கலந்தது இத்தலமே என்கின்றனர் பெரியவர்கள். சீதை சென்று தங்கிய மங்கலம் என்பதால் வந்த பெயரே சீதக்கமங்கலம். பேச்சு வழக்கில் சீதக்கமங்களம் எனவும் கூறுகிறார்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ராஜகோபுரமே மூலஸ்தான விமானமாக அமைய, அதன் கீழ் மங்கள ரங்கநாதரின் கருவறை அமைந்திருப்பது ரங்கமணி கோபுரம் எனப்படும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar