Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: நெல்லிமரம்
  தீர்த்தம்: சரவணப் பொய்கை
  புராண பெயர்: ராஜா பெயரே ஊர், பேரே ஊர்
  ஊர்: பேரையூர்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வார, மாத, நட்சத்திர, வருடந்தர சிறப்பு நாட்களில் விசேஷ பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.  
     
 தல சிறப்பு:
     
  திருப்பரங்குன்றத்து போலவே இக்கோயில் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாககும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மேலப்பரங்கிரி, பேரையூர், டி. கல்லுப்பட்டி அருகில் மதுரை மாவட்டம்  
   
போன்:
   
  +91 9786390216, 9442032239 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது, கோயில். அதன் கீழ்ப்புறம் சரவணப் பொய்கை எனும் தீர்த்தக் குளம் உள்ளது. பிரதான வாசல் தாண்டியதும், இடதுபுறம் பெரிய விநாயகர் சன்னதி இருக்கிறது. அதன் வடபுறம் சேத்தூர் நாலுகால் மண்டபம் எழிலாக அமைந்துள்ளது. கோயிலின் தென்புறம் மலைச்சரிவில் ஆண்டு முழுவதும் வற்றாத தீர்த்தச் சுனை ஒன்று உள்ளது. சாலக் கோபுர வாசல் தாண்டியதும் விஸ்தாரமான பிராகாரம், கொடிமரம், பலிபீடம், மயில் வாகன மண்டபம் உள்ளன. இம் மண்டப விதானத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிக்கும் பட்டியல் கல் மிக்க கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவை நாயக்கர் கால பாணியில் அமைந்துள்ளன. கருவறை விமானம், சோழர்கால பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பழைமையான கொடி மரமும், விமான கலசங்களும் பாரமரிப்பின்றிக் காணப்படுகிறது. கருவறைக்குத் தென்புறம் மீனாட்சி சுந்தரேஸ்வரப் பெருமானுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. பைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன், கன்னிமூலை கணபதி, காசி விஸ்வநாதர் - விசாலாட்சி தண்டாயுதபாணி ஆகியோரும் உள்ளனர். வடக்குச் சுற்றில் நந்தவனம் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  தம்பதி சமேதாராக காட்சி தரும் இவரை வணங்கினால், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நிச்சயம். அதோடு தங்கள் வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவிக்கு உடல் நலம் குன்றினால், இங்கே வந்து பயபக்தியோடு வழிபட்டால், சூழ்ந்திடும் வினைகள் தீரும். உடல்நலம் சீராகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றப்படுகிறது.  
    
 தலபெருமை:
     
  அர்த்த மண்டப வாசலில் இடும்பன், வீரபாகு சிற்பங்கள் இருக்கின்றன. விநாயகர் சன்னதியும் உள்ளது. கருவறையில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியசுவாமி நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஜமீன்தார் தும்பிச்சி நாயக்கருக்கு முருகப்பெருமான் வேல் வடிவில் காட்சி தந்த இடத்தில் இரு பக்கமும் நாகர்கள் நிற்க, அலங்கரிக்கப்பட்ட வேல் திருவுருவம் நிறுவப்பட்டு அன்றாடம் பூஜை செய்யப்பட்டு வருகிறது.  
     
  தல வரலாறு:
     
  திருப்பரங்குன்றத்தைப் பரங்கிரி என்றழைப்பதைப் போலவே மேலைப் பரங்கிரி என்றழைக்கப்படும் தலம் ஒன்றும் உள்ளது. தொன்மைப் புகழ்மிக்க பேரையூர் திருத்தலத்தில் ஓங்கி உயர்ந்த பிரமாண்ட மொட்டை மலையின் அடிவாரத்தில் குளுமையான மரங்கள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில்தான் அது. ஓங்கி உயர்ந்த மலைச்சிகரத்தில் சிவன்கோயில் இருக்க, அதன் அடிவாரத்தில் குமரனுக்குக் கோயில். அதன் கிழக்கே சரவணப் பொய்கை என பல விதங்களில் திருப்பரங்குன்றம் போலவே இருப்பதால், மேலைப்பரங்கிரி என்கின்றனர். நாயக்க மன்னர்கள் காலத்தில், இந்த மலைநாட்டுப் பகுதியை தும்பிச்சி நாயக்கர் என்ற ஜமீன்தார், ஆட்சி செய்து வந்தார். அவரது  பெயரால் தும்பிச்சி நாயக்கனூர் என்றே அழைக்கப்பட்டது இப்பகுதி.

ஆட்சிபுரிபவரின் பெயரை குடிமக்கள் உச்சரிக்கத் தயங்கியதால், ராஜா பெயரே ஊர் என்று சொல்லலாயினர். காலப் போக்கில், அதுவே மருவி, பேரே ஊர்; பேரையூர் என்று ஆனது. அந்தக் காலத்தில் மாத கார்த்திகை நாட்களில் தும்பிச்சி நாயக்கர், திருப்பரங்குன்றம் சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவ்வாறு செல்கையில் கனமழை பெய்த காரணத்தால் வழியில் இருந்த ஆலம்பட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதனால் பயணம் தடைபடவே தும்பிச்சி நாயக்கர் மனவருத்தம் அடைந்தார். அன்றிரவு அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி, திருப்பரங்குன்றத்திற்கு வருவதற்கு பதில், அவரது இருப்பிடத்துக்கு அருகிலேயே தமக்காக கோயில் ஒன்றை எழுப்பிடச் சொன்னார். தும்பிச்சி நாயக்கரும் அப்படியே செய்தார். கனவில் வந்த கந்தனின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட கோயில் இது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருப்பரங்குன்றத்து போலவே இக்கோயில் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாககும்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.