Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பழநியாண்டவர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பழநியாண்டவர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பழநியாண்டவர்
  தல விருட்சம்: ஊஞ்ச மரம்
  தீர்த்தம்: தீர்த்தக் கிணறு
  ஆகமம்/பூஜை : மூன்று கால பூஜைகள்
  ஊர்: சாலையூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  செவ்வாய்க்கிழமை வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் காலை 11 மணிக்கு விசேஷ அபிஷேக அலங்கார, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். ஏராளமான பக்தர்கள் இந்த ஆறு நாட்களும் விரதமிருந்து இத்தலத்தில் நடைபெறும் சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துகொண்டு பழநியாண்டவரை தரிசிக்கின்றனர். பின்னர் அவர்களுக்கு வாழைத்தண்டு சாதம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் அதனை உண்டு விரதத்தை முடிக்கின்றனர். தைப்பூசத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், சித்திரை முதல்நாள் போன்ற தினங்களும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள முருகன் கல்வடிவில் அமைந்துள்ளதால் சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மதியம் 12.30 வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பழநியாண்டவர் திருக்கோயில், சாலையூர், பொகளூர் அஞ்சல், அன்னுõர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்-– 641 697  
   
போன்:
   
  +91 99 42 21 23 50 
    
 பொது தகவல்:
     
  மூலவர் சன்னிதிக்குள் சிறிய தும்பிக்கை போன்ற உருவுடன் கூடிய சுயம்பு விநாயகர் குடிகொண்டுள்ளார். சன்னதியில் வெளிப்பகுதியில் ஆயி அம்மன் அருளாசி கிடைக்கின்றது. இங்கு உள்ள வற்றாத சுனை மற்றும் தீர்த்தக் கிணறு ஆகியவற்றில் இருந்து எடுத்து வரப்படும் தீர்த்தத்தால் மூலவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவரின் அபிஷேக தீர்த்தத்தைப் பருகினால் ஒரு சில பிணிகள் நீங்குவதாக ஐதிகம். தினமும் மூன்று கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. தற்போது பழநியாண்டவருக்கு கருவறை, அர்த்த மண்டபம் மகா மண்டபம் கட்டப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  ஏழாம் நாளான தைப்பூச தினத்தில் இங்கே நடக்கும் பூஜையில் கலந்துகொள்வோர்க்கு திருமணத்தடை நீக்கம், குழந்தை வரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் யாவும் ஈடேறுவது கண்கூடு என்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருவிழா சமயத்தில் அன்றைய தினம் சாலையூர், அன்னூர், குரும்பபாளையம், ஒன்னக்கரசம்பாளையம், நல்லி செட்டிபாளையம், காரேகவுண்டன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களிலிருந்து பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  ஆண்டுகள் பல நூறு கடந்தாலும் பழைமை மாறாமல் இன்றளவும் ஒரு சில விஷயங்களை பொக்கிஷமாகவே கருதி நாம் கடைப்பிடித்து வருவது தனித்தன்மையானது. அதுவும் தெய்வ வழிபாட்டில் அப்படி அனுசரிப்பது மிக மிக விசேஷமானது. அந்த வகையில் தனிப்பெரும் சிறப்பு கொண்டு, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை நடுகல்லை கடவுளாய் ஏற்று வழிபட்டு வரும் தலம் சாலையூர். இந்த ஊரின் அருகே உள்ள சிறிய மலைக் குன்றின் மேல் பழநியாண்டவர் கோயிலும், குன்றின் மீது ஏறத்துவங்கும் முன் இடும்பன் கோயிலும் உள்ளது.

இந்தக் கோயிலுக்கான தல வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. என்றாலும் இக்குன்றின் மீது உள்ள பழநி ஆண்டவரை பாண்டவர்களும் ஏராளமான சித்தர்களும் வழிபட்டிருப்பதாக செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. இடும்பன் நடுகல் வடிவில் அருள்பாலிக்கிறார். குன்றின் மீது ஏறினால், பழநியாண்டவர் மேற்கு நோக்கி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரும் நடுகல் போன்ற அமைப்பாகவே காட்சியளிக்கிறார். என்றாலும் அதில் வேலின் திருவுரு இருப்பது சிறப்பு. இறைவன் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே சாலையூர் முருகப்பெருமான், நடுகல் தோற்றத்தில் அருள்பாலிப்பதாகச் சொல்கிறார்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள முருகன் கல்வடிவில் அமைந்துள்ளதால் சிறப்புமிக்கதாகும்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.