Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஐநூற்று பிள்ளையார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஐநூற்று பிள்ளையார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஐநூற்று பிள்ளையார்
  ஊர்: விஜயபுரம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சங்கடஹரசதுர்த்தி, பெரிய சதுர்த்தி, கார்த்திகை, வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று உற்சவர் கணபதி ஊருக்குள் வீதி உலா வருகிறார். ஆதிநாயகா எனப் போற்றி வணங்குவோர்க்கு எல்லாம் அருள்பாலித்து கோயில் திரும்புகிறார் இந்த அரனார் மகன்.  
     
 தல சிறப்பு:
     
  வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவர் மட்டுமே கருவறையில் தினசரி பூஜை காண்பவராக இருப்பார். ஆனால் இக்கோயிலில் மூலவர் தனி, உற்சவர் தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இருவருமே தினமும் ஆராதனை காண்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு ஐநூற்றுப் பிள்ளையார் திருக்கோயில், காந்தி சாலை, விஜயபுரம், 610 001. திருவாரூர்.  
   
போன்:
   
  +91 9442715007 
    
 பொது தகவல்:
     
  நின்ற கோலத்தில் உள்ள உற்சவர். திருவிழா நாட்களில் நான்கு வீதிகளில் வீதியுலா வருகிறார். அப்போது கணபதியாக குழந்தைகள் முதல் வயோதிகர் வரை எல்லோரையும் பக்திப் பரவசம் ஏற்படுத்திவிடுகிறார். இந்த ஐநூற்றுப் பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேக வரலாறுகளைக் கொண்டு இத்தலம் முந்நூறு வருடப் பழமை உள்ளதென்பதை அறிய முடிகிறது. ஆனால், அதற்கும் முற்காலத்திலிருந்தே இந்த கோயில் இங்கு இருந்து வருவதாகச் சொல்கிறார்கள். எத்தனையோ குடமுழுக்குகளைக் கண்ட இக்கோயில் செப்டம்பர் மாதம் 2015-ம் ஆண்டு, மீண்டும் ஒரு குடமுழுக்கு கண்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளது. மூலவர், உற்சவர் தவிர, பிராகாரத்திற்குள் 18 பிள்ளையார்கள் தனித் தனி மாடங்களில் உள்ளனர். சாதாரண நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கோயில்.  
     
 
பிரார்த்தனை
    
  ஐஸ்வர்யம் பெருகவும், அறிவு, ஆற்றல், பெருமை, கல்வியோடு ஆனந்த வாழ்வு பெறவும் பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  விநாயகருக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி, கொழுககட்டை படைக்கின்றனர். 
    
  தல வரலாறு:
     
  எந்தக்காரியத்தைத் தொடங்கினாலும் இடையூறு இன்றி இனிது முடிய எல்லோரும் பிரார்த்திக்கும் முதற்கடவுள் கணபதிதான். போகிற அவசரத்தில் கூட, எளிதில் தரிசித்து வணங்கி விட்டுச் செல்லும் விதத்தில் எளிமையாகக் கோயில் கொண்டுள்ள ஒரே கடவுள் இவர்தான். எந்தச் சாலை வழியாகப் போனாலும் கூப்பிடு தொலைவில் ஒரு பிள்ளையார் கோயில் என்பது தமிழகத்தின் தனிச்சிறப்பு. இந்து மதத்தில் கணபதியையே பரம்பொருளாக வழிபட்டு வந்த ஒரு பிரிவினர் இருந்தனர். இந்த வழிபாட்டிற்கு காணபதம் என்றும் பெயர் இருந்ததாக காஞ்சி பெரியவர் சொல்லியிருக்கிறார். கணபதி மூலாதார சக்தி உருவினர், பிரணவம் என்ற ஓங்கார வடிவினர். அவரது துதிக்கையே ஓங்காரத்தைக் குறிக்கும் வகையில் அமைந்ததுதான். கணபதி என்னும் பதத்தில் உள்ள க என்பது மனோ வாக்குகள் ண என்பது அவற்றைக் கடந்த நிலை. அவ்விரண்டுக்கும் ஈசன் கணேசன். சிலர் க என்பது அறிவு; ண என்பது வீடு என்று கொண்டு அறிவுக்கும் வீட்டுக்கும் உரிய தெய்வம் என்பர். கொடிய மாயையை துண்டிப்பவர் என்பதால் வக்ர துண்டர் எனப் பெயர் கொண்டார்.

அவர் வாகனமாகிய மூஷிகம் நமக்குள் இருந்து நம்மை அழிக்கும் கள்ளத்தன்மையான உலகப் பற்று என்றும், அவர் உண்ணும் மோதகம் இன்பத்தைப் பயக்கும் ஞானம் என்றும் கூறுவர். கணபதி வழிபாட்டுக்கு ஆதாரமான நூல்கள் கணபதி உபநிடதம், ஹேரம்ப உபநிடதம் என்ற இரு சிறு உபநிடதங்கள். கணேச வழிபாட்டை காணபத்யம், கணாபத்யம் என இருவகையாகக் கூறுவர். கணேச புராணம், ஸ்காந்தத்தில் உள்ள கணேச மான்மியம், பிரம வைவர்த்த புராணத்திலுள்ள கணேச கண்டம், முத்கல புராணம் என்ற புராணங்களும் கணேச கீதை, கணேச தந்திரம், கணேச கல்பம், கணேசா சார சந்திரிகை முதலிய தனி நூல்களையும் பிள்ளையார் வழிபாட்டு முறைக்கு ஆதார சாஸ்திர நூல்களாகக் கொண்டிருந்தனர். கணபதி வழிபாட்டுக்கெனவே பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தைத் திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியிருக்கிறார். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும், அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்றும் சாரதா திலகம் என்ற நூல் கூறுகிறது. ஐம்பத்தொரு சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட பிள்ளையார் கோயில் கொண்டதனால் திருவாரூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்கு ஐம்பத்தொரு பிள்ளையார் கோயில் எனப் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும். அது மருவி ஐநூற்றொரு பிள்ளையார் துகி, இப்போது ஐநூற்றுப்பிள்ளையார் ஐநூத்து பிள்ளையார் என்று மக்களால் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு நூறு மடங்கு பலன் என்று சொல்வார்களே, அந்த மாதிரி இந்த விநாயகரை வணங்கினால், ஐந்நூறு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வழக்கமாக கணபதி கோயில்களில் மூலவர் மட்டுமே கருவறையில் தினசரி பூஜை காண்பவராக இருப்பார். ஆனால் இக்கோயிலில் மூலவர் தனி, உற்சவர் தனியாக சன்னிதி கொண்டுள்ளதோடு, இருவருமே தினமும் ஆராதனை காண்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar