Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பழநி ஆண்டவர்
  ஊர்: திருவாரூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் உற்சவர் வீதியுலாவும் நடைபெறும். சஷ்டி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து விண்ணதிர, மண்ணதிர கோஷமிட்டுக் கொண்டே கோயிலுக்கு வருவார்கள். வைகாசி விசாகத்தன்று காலை முதல் மதியம் வரை முருகனுக்கு பாலபிஷேகம் நடைபெறுகிறது. பழநி ஆண்டவருக்கு நடத்தப்படும் பாலபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சகல பாவமும் அகலும் என்பது நம்பிக்கை கார்த்திகை தீபத் திருவிழாவன்று கோயில் பக்தர்களால் திமிலோகப்படும் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் கோயிலெங்கும் பிரகாசிக்க, பழநி ஆண்டவரை தரிசிப்பது பக்தர்களை பரவசமடையச் செய்யும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு முருகப் பெருமான், ஆண்டிக் கோலத்தில் மேற்கு நோக்கி கோயில் கொண்டருளுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில், கீழவீதி, திருவாரூர் -610 001  
   
போன்:
   
  +91 4366 242343 
    
 பொது தகவல்:
     
  மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தில் அண்ணன் ஆனைமுகன், மகாகணபதி என்ற பெயரில் அருள்கிறார். அவரது தம்பி பழநி ஆண்டவரை கருவறையில் உள்ளார்.  
     
 
பிரார்த்தனை
    
  மணப்பேறு, மகப்பேறு உள்பட பக்தர்களின் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைக்கிறார் பழநி ஆண்டவர். குறிப்பாக இவருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வழிபடுவோருக்கு நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பெரியவர்கள் மாத்திரமின்றி, சிறுவர் சிறுமிகளும் சின்னஞ்சிறு காவடிகளைத் தோளில் சுமந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றிடத் திரள் திரளாக வருகிறார்கள்.  
    
 தலபெருமை:
     
  பழநிக்குச் சென்றாலும் படியேற உடல் நிலை ஒத்துவராதோர், முதியோர் என்று ஏராளமான பேர் உண்டு. குழந்தைகளை நடத்தி அழைத்துக் கொண்டு செல்ல முடியாதவர்களும் உண்டு. இப்படியானோர், தாங்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ பழநி மலை ஏறி முருகப் பெருமானின் திருக்காட்சி தரிசனம் காணுவது ரொம்பக் கஷ்டம் அறுபடை வீடுகளில் பழநியில் மட்டும்தான் அவரை தண்டாயுதபாணியாக தரிசிக்க முடியும். அப்படியான அன்பர்களின் குறை போக்கும் விதமாகவே சமவெளியில் சில தலங்களில் மட்டும் முருகப்பிரான் தண்டபாணியாகக் கோயில் கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அந்த வகைக் கோயிலுள் ஒன்று, திருவாரூர் பழநி ஆண்டவர் திருக்கோயில்.  
     
  தல வரலாறு:
     
  அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடப் பெற்றவை தேவாரத் திருத்தலங்கள். மாணிக்கவாசகர், சேக்கிழார் உள்ளிட்ட சிலரால் பாடப்பெற்றவை திருமுறை திருத்தலங்கள். ஆனால் இவர்கள் காலத்திற்குப் பிறகும் இறைவனுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் மீது ஒரு பதிகம் பாடி வைக்க யார் உள்ளன ஆயினும், அந்த கோயிலின் பக்தர்களுக்குத் தாங்கள் வந்து வழிபடும் கோயில் இறைவன் மீது ஒரு பாடல், ஒரு பதிகம், ஒரு சுலோகம் இப்படி ஏதேனும் ஒன்று இருந்தால் ஒரு மகிழ்ச்சிதான், அதுவும் பக்தியும், இறை தொண்டுமே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவர் அப்படி ஒரு துதி பாடிக்கொடுத்தால்தான் பக்தர்களுக்கும் மனநிறைவு ஏற்படும். அதை உளப்பூர்வமாக ஏற்பார்கள். திருவாரூரில் இப்படி எழுப்பிக்கப்பட்டது தான், பழநி ஆண்டவர் திருக்கோயில். அதன் மீது ஒரு சுலோகம் பாடிக் கொடுத்தவர் நம் காலத்து நாயன்மாராக வாழ்ந்த கிருபானந்தவாரியார் சுவாமிகள்.

இத்தலத்தின் மீது அவர் பாடிக் கொடுத்த பாடல்:

திருவாரூர் தன்னில் திகழ் கீழ வீதி
வரூ பழநியாண்டவர் மாட்சிமைத் திருவடியை
கண்டவர் கலித்துயரங்காணார் கதிபெறுவர்
பண்டாய இன்பம் படைத்து
பல வருடங்களாக சின்னஞ்சிறு கோயிலாக இருந்த முருகன் கோயில் இது. ஆரூர் கோயிலுக்குள் அமர்ந்திருக்கும் தந்தை சிவபிரானை நேருக்குநேர் பார்த்தபடி, அதுவும் ஆண்டிக் கோலத்தில் கையில் தண்டாயுதம் தரித்து, அருள் தவழும் புன்னகையுடன் முருகன் நிற்கும் திருக்காட்சி ரொம்ப விசேஷம்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு முருகப் பெருமான், ஆண்டிக் கோலத்தில் மேற்கு நோக்கி கோயில் கொண்டருளுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.