Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆதி மூர்க்கம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆதி மூர்க்கம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதி மூர்க்கம்மன்
  உற்சவர்: ஆதி மூர்க்கம்மன்
  அம்மன்/தாயார்: ஆதி மூர்க்கம்மன்
  தீர்த்தம்: சிறுவானி
  புராண பெயர்: பேரூர்
  ஊர்: பேரூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அரண்மனை விளக்கு திருவிழா என்றால், இக்கோவில் இருளர்களால் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு கோயில். அதனால், அவர்கள் தீப்பந்தங்கள் ஏற்றி விழா கொண்டாடி, பன்றியை பலியாக கொடுப்பார்கள். இது தான் அரண்மனை விளக்கு பூஜையாக நாகரீக நாட்டில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி உத்திரத்திருவிழா, அரண்மனை விளக்கு திருவிழா, திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது தான் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா நடக்கும். ஆனால், மூர்க்கம்மன் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு முன்பிலிருந்து இருப்பதாலும், மூர்க்கம்மன் பேரூர் பகுதியில் இருந்த வனத்தின் காலி என்பதாலும் பேரூர் தேர் திருவிழாவுக்கு முன்பு இக்கோவிலில் தேர் இழுத்து விழா கொண்டாடப்படும் என்கின்றனர் இக்கோவிலில் உள்ள முன்னோர்கள்.  
     
 தல சிறப்பு:
     
  பண்டைகாலம் முதல் தொன்றுதொட்டு பேரூர் கோவிலில் நடக்கும் திருவிழாவின் போது இந்த ஆதி மூர்க்கம்மனுக்கு தான் முதல் நாள் உற்சவம் நடக்கும் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதி மூர்க்கம்மன் கோவில், பேரூர் கோவில் பின்புறம், பேரூர்,641010. கோவை.  
   
போன்:
   
  +91 9942479729 
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலின் வரலாறு பற்றி முன்னோர்கள் யாரும் கூறிச் செல்ல வில்லை. மேலும், பேரூர் புராணத்தில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால், அதற்கும் முன்னால் எழுதப்பட்ட சோழன் பூர்வபட்டயத்தில் இந்த கோயில் உள்பட 36 கோவில்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. கோயில் மிகவும் அமைதியான பொதுமக்கள் ஆதிகம் கூடாத இடத்தில், வனம் சூழ்ந்த நிலையில் இருக்கும். கோயிலை சுற்றியும் தற்போது தோட்டங்களும், விவசாய நிலங்களும் இருப்பதால், மக்கள் இக்கோவிலுக்கு வருவதற்கு ஆதிகம் விரும்புவதாக தெரிவித்தனர். இந்த கோயில் இருக்கும் இடம் அடந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. ஆனால், தற்போது தோட்டங்கள் மட்டுமே இருக்கிறது. இயற்கை சூழ்ந்துள்ள இடம் என்பதால், இக்கோயிலுக்கு வருவோர் தியானம் செய்யத் தவறுவது இல்லை. மேலும், திருக்கல்யாணத்திற்கான வரலாறு குறித்து கோவில் குருக்கள் கூறுகையில், பேரூர் கோயிலில் திருக்கல்யாண உற்சவமே இங்கு தான் ஆண்டு காலத்திற்கு முன்பு நடந்தது. ஆனால், காலப்போக்கில் அது மறைந்து தற்போது பேரூர் கோயிலுக்கு உள்ளேயே நடக்கிறது என்றார்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு முக்கிய பிரார்த்தனையாக செவ்வாய்தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணத்தடை நீங்க இக்கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்வார்கள். முக்கிய திருவிழாக்களின் போது பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆடு, மாடு, மற்றும் கோழிகளை பலி கொடுத்து வந்துள்ளனர். ஆனால், அறநிலையத்துறையின் கீழ் இயங்கத் துவங்கியதில் இருந்து அவற்றை பலி கொடுப்பதை நிறுத்தி விட்டனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இக்கோயிலில் பலி கொடுப்பது நிறுத்தப்பட்டதை அடுத்து, வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஆடு மற்றும் கோழிகளை இங்கே விட்டு செல்கின்றனர். மேலும், இந்த கோழிகள் கத்தும் சத்தம் பேசுவதை போல் இருக்கும் என்றும் பக்தர்கள் கூறினர். 
    
  தல வரலாறு:
     
  தற்போது இக்கோயில் அமைந்திருக்கும் இடமானது பல ஆண்டுகளுக்கு முன்னர் வனப்பகுதியாக இருந்தது. அங்கு இருளர்களாக ஒரு பாறையை கடவுளாக வணங்கி வந்தனர். பின்னர் நாளடைவில் ஒரு தோற்றம் அமைக்கலாம் என முடிவு செய்தனர். ஒரு சில விசேஷங்களின் அம்மன் மிகவும் ஆக்ரோஷமாக கட்சியளித்ததை பலரும் உணர்ந்துள்ளனர். அந்த ஆக்ரோஷமான உருவத்தை வரைந்து அதனை சிலை வடிவம் அமைத்துள்ளனர். மேலும், பல்வேறு விசித்திரமான நிகழ்வுகள் கோயிலை சுற்றி நடப்பதாக மக்கள் நம்புகின்றனர். உதாரணமாக இரவு நேரங்களில் காட்டுப் பூனைகள் கோயிலை சுற்றி வந்து அம்மனை வணங்குவதை பலரும் பார்த்துள்ளனர்.  எனவே இந்த கோவில் பேரூர் கோவிலைவிட பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியானது. அந்த பூர்வபட்டயத்தில் கரிகாற்சோழன் இந்த கோவிலுக்கு வந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. கரிகாற்சோழன் தனது சாபத்தீட்டை ஒழிப்பதற்க்காக கொங்கு நாட்டில் உள்ள கோவில்களை புதுப்பித்து, நொய்யலில் தீர்த்தம் எடுத்து குளித்துள்ளார். அப்போது இருளர் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோவிலுக்குள் சோழன் வருவதை மூர்க்கம்மன் அனுமதிக்கவில்லையாம். அதற்க்காக சோழ நாட்டை சேர்ந்த ஒருவரை பலி கொடுத்தால் மட்டுமே அனைவரும் இக்கோவிலுக்குள் வர முடியும் என மூர்க்கம்மன் சோழனின் கனவில் தெரிவித்ததாக கூறிப்படுகிறது. அதன்படி, சோழ நாட்டை சேர்ந்த ஒருவர் பலி கொடுத்த பின்னரே அனைவரும் அக்கோவிலுக்குள் செல்வதாக வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராம தேவதை கோவில்கள் இருக்கும். இந்த தேவதையின் கோவில் மிகவும் சிறியதாய் இருக்கும். இதுபோன்ற கிராமங்களில் சிவன் கோயிலோ, திருமால் கோயிலோ இருக்கும். ஆனால், அவற்றுக்கு முன்னதாக கிராம தேவதைக்கே உற்சவ பூஜை நடக்கும். அந்த கிராம தேவதைகளின் வரிசையில் பேரூர் கிராம தேவதையாக மூர்க்கம்மன் திகழ்கிறது. இக்கோவில் மிகவும் ஒதுக்குப்புறமாக, ஒரு வனத்தில் இருப்பதுபோல் இருப்பதால், வெளியூர் வாசிகள் செல்வது அரிது. பண்டைகாலம் முதல் தொன்றுதொட்டு பேரூர் கோவிலில் நடக்கும் திருவிழாவின் போது இந்த ஆதி மூர்க்கம்மனுக்கு தான் முதல் நாள் உற்சவம் நடக்கும்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பண்டைகாலம் முதல் தொன்றுதொட்டு பேரூர் கோவிலில் நடக்கும் திருவிழாவின் போது இந்த ஆதி மூர்க்கம்மனுக்கு தான் முதல் நாள் உற்சவம் நடக்கும் என்பது சிறப்பு
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar