Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சொக்கநாதீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சொக்கநாதீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சொக்கநாதீஸ்வரர்
  உற்சவர்: சொக்கநாதீஸ்வரர்
  அம்மன்/தாயார்: மீனாட்சி
  புராண பெயர்: புத்தூர்
  ஊர்: மணம்தவிழ்ந்தபுத்தூர்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சோமவார பூஜை  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்து சிவன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மீனாட்சி உடனுறை சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில். மணம்தவிழ்ந்தபுத்தூர், பண்ருட்டி தாலுக்கா, கடலூர்.  
   
போன்:
   
  +91 9751988901, 9047261148 
    
 பொது தகவல்:
     
  லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூலவர் சன்னதியின் வெளிப்புறத்தில் அருள்பாலிக்கிறார்.அம்மன் சன்னதியின் முன்பு அவரது வாகனமான சிம்மமும், அதன் பின்னே பலிப்பீடமும் அமைந்துள்ளது. இங்கு, காலபைரவரும், சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் வீற்றிருந்து அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு. அதனை அடுத்து சந்திரனும் ஒரே வரிசையில் தனியாக வீற்றிருக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  இது ஒரு திருமணத்தடை பரிகார ஸ்தலமாகும். திருமணத்தில் ஏற்படும் தடைகள் நீங்கவும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் இக்கோவிலில் சோமவாரத்தில் பரிகார பூஜைகள் செய்யபடுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இங்கு ஆவுடையார் சன்னதிக்கு மேலே சுதந்தரரைமணம் தடுத்த கோலம் சிலை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆவுடையாருக்குமுன்புறம் நந்தியும், நந்தியின் பின்புறம் பலிபீடமும் இருக்கு. முக்கியமாகஅகஸ்தியர் வழிபட்ட ஸ்தலமாகும் இது.
 
     
  தல வரலாறு:
     
  முதலில் இந்த ஊர் புத்தூர் என்று மட்டும்  முன்காலத்தில் அழைக்கப்பட்டது. சுந்தரருடையதிருமணத்தைத் தடுத்து அவரை ஆட்கொண்டதால் மணம் தவிர்த்த புத்தூர்என்றும், பின்னர் அது மருவி மணம் தவிழ்ந்த புத்தூர் என வழங்கபடுகிறது. சடைய நாயனார், இசைஞானியார் தம்பதிக்கு திருநாவலூரில், கி.பி. 807ஆம் ஆண்டு, ஆவணி உத்திர நன்னாளில் பிறந்தவராவார்  சுந்தரர். இவருக்கு தந்தையிட்டபெயர் நம்பி ஆரூரன் நடுநாட்டு மன்னரான நரசிங்க முனையரையர் சுந்தரரின் சிறுவயது அழகை பார்த்து அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியுடன் தத்தெடுத்து, தானே வளர்த்து வந்தார்கள்.

இனி சுந்தரருடைய வரலாற்றை பாப்போம். சுந்தரரின்  பதினாறாவது வயதில், அவருக்குத் திருமணம் நடத்திட நினைத்தார் மன்னர். இதற்கு சடையனார் இசைஞானியார் அனுமதி பெற்று மணப்பெண் தேடினார். இறுதியில் இன்றைய பண்ருட்டியை அடுத்த புத்தூரில் வாழ்ந்திருந்த சடங்கவி என்ற சிவாச்சார்யாரின் மகளான கமலஞானப் பூங்கோதையினைத் தேர்வு செய்து நிச்சயம் செய்தார்.

திருமணத்தேதி குறிக்கப்பட்டது! புத்தூர் விழாக்கோலம் பூண்டது.   திருக்கோவில் இருக்கிற இந்த வீதியில் தான் திருமண வாத்தியங்கள் முழங்க சுந்தரர் தேரில் ஆள், அம்பு, குதிரை, யானை பரிவாரங்களுடன் திருமணக் கோலத்தில் வந்தார், திருமணச்சாலையிலே திருமணச் சடங்குகள் நிறைவேறிக் கொண்டிருந்தது. அந்த  வேளையில் உரத்தக் குரலில் ஒரு முதியவர் சுந்தரா! நிறுத்து உன் திருமணத்தை?! என்றுமுழங்கியவாறு மணவறையை நெருங்கினார்! அனைவரும் திகைத்துப் போய்த் திரும்பினர். அந்த முதியவர், கையில் ஏட்டுச் சுவடியொன்றுடன் வந்தார். சுந்தரரை பார்த்து, ‘அப்பனே! நீ எனது அடிமை! உன் தகப்பன், பாட்டன் எல்லோரும் எனக்கு அடிமை! என் அனுமதியின்றி நீ மணம் முடிக்க முயன்றது குற்றமாகும்! என்றார் ஆக்ரோஷமாக...

திருமணக் கோலத்தில் இருந்த  சுந்தரர், நீர் என்ன பித்தனா? நான் அடிமை என்பதற்கு அத்தாட்சி என்ன? என்று கேட்க, இதோ உன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை ஓலை எனக்கூறி ஓர் ஓலையை நீட்டினார் முதியவர். அதைப் படித்துக்கூடப் பார்க்காமல் கிழித்து, அக்கினியில் இட்டுப் பொசுக்கினார் நம்பியாரூரர்! முதியவருக்கும்,சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. ஓலையை சுந்தரர் கிழித்து தீயில் இட்டதினால் கோபமுற்ற முதியவர் இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்கு செல்வோம் வா!  அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன் என்று கூறினார். சுந்தரரோ, “அப்படியோர் வழக்கு இருக்குமெனில் அதை முடித்தப் பின்னரே மணம் முடிப்பேன் எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார்.

இந்த திருவீதியில் ஒரு விநாயகர் சன்னதி இருக்கு வழக்கமா எல்லாகோவில்களிலும் கிழக்கு பார்த்த அமைப்பில் விநாயகர் இருப்பார்.ஆனா, இங்க  சிவன் தடுத்தாண்டு சுந்தரரைக் கூட்டிச் செல்வதைப் பார்த்தவாறேஇருப்பதுப் போல விநாயகர் தெற்கு பார்த்த அமைப்பில் இருக்கிறார். இங்க ஒரு திருக்குளம் இருந்ததாகவும் அதில்தான் மணம் முறிந்த உடன் வெறும் கையுடன் சென்ற சுந்தரர் வந்த தேர், குதிரை எல்லாம் சென்று மறைந்ததாகவும் சொல்லபடுகிறது.பிறகு இந்த வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் நடந்தது. இதைதான்  தீராதவழக்குக்கு திருவெண்ணெய் நல்லூர் தீர்ப்பு என்று சொல்லும் பழஞ்சொல் ஒன்று உண்டானதுப் போல!

சுந்தரருடன் மணம் முறிந்த நிலையில்  கமலஞானப்பூங்கோதை வழக்கு நடந்த இடத்திற்கு சென்று இறைவனிடம் முறையிடுகிறார்.இப்படி என்னுடைய திருமணம் ஆகிவிட்டதே! நான் என்ன செய்வது!?எனக் கேட்கும்போது ஈசன் அவருக்கு காட்சியளித்து கமலஞானப் பூங்கோதையைஅவர் பிறந்த ஊரான இங்கு வந்து தவம் இயற்றி என் திருவடியை வந்து சேர் எனக் கூறினார். அந்த அம்மையாரும் திரும்பி இந்த ஸ்தலத்திற்கு வந்து இறைவனுடையதிருவடியை அடைந்தார். பின்னர் சிவப்பெருமான் அருளால் கயிலையைச் சேர்ந்த கமலினியும், அநிந்தையும் பூவுலகில் பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் அவதரித்திருந்தனர். சிவனருளால் அவர்களை திருமணம் செய்து கொண்டாராம் சுந்தரர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து சிவன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar