Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: லக்ஷ்மி நாராயணப் பெருமாள்
  உற்சவர்: வரதராஜர்
  அம்மன்/தாயார்: லக்ஷ்மி
  ஊர்: எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரமோற்சவம், புரட்டாசி மாத பூஜை  
     
 தல சிறப்பு:
     
  பெருமாள் மேற்கு நோக்கியபடி அருள்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில் எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி நாகப்பட்டினம்.  
   
    
 பொது தகவல்:
     
  திருமணத்தடை நீக்கும் உத்வாகநாதர் திருக்கோயில் அருகில் அமைந்துள்ளது. லட்சுமி நாராயணத் திருக்கோயிலில் தும்பிக்கையாழ்வார், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஐந்து தலை நாகர், ராமானுஜர், ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.      
 
     
 
பிரார்த்தனை
    
  சாபத்தை நீக்க, ராகு தோஷம் விலக, திருமணத் தடை நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் திருமஞ்சணம் செய்து வஸ்திரம் சார்த்தி நைவேத்தியம் படைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.  
    
 தலபெருமை:
     
  இங்கே மேற்கு நோக்கியபடி பெருமாள் காட்சி தருவது சிறப்பு என்கின்றனர். அதாவது திருமணக் கோலத்தில் நின்றருளும் சிவ பார்வதியைப் பார்த்தபடியே அந்தத் திசை நோக்கி நிற்கிறாராம். பெருமாள். உற்சவரின் திருநாமம் வரதராஜர். மடியில் லட்சுமியை அமர்த்தியபடி கருணையும் கனிவும் பொங்கக் காட்சி தரும் லட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.

தன் திருக்கரத்தில் அமிர்த கலசத்தை ஏந்தி, வடக்குப் பார்த்தபடி தன்வந்திரி பகவான் தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். அஸ்த நட்சத்திர நாளில் அல்லது புதன்கிழமைகளில் இங்கு வந்து தன்வந்திரிக்கு மூலிகைத் தைலம் சார்த்தி. நெய் தீபமேற்றி 11 முறை வலம் வந்து பிரார்த்தித்தால் தீராத நோயும் தீரும். ஆரோக்கியம் கூடும் என்பது ஐதீகம்.
 
     
  தல வரலாறு:
     
  நடந்து நடந்து காலெல்லாம் வலிக்கிறது என்று அந்தப் பசு அலுத்துக் கொண்டது. இளைப்பாற இடம் தேடி ஒவ்வொரு ஊராக மெள்ள நடந்து வந்தது. மரங்களும் மகிழ மரங்களும் சூழ்ந்த அந்த வனப்பகுதியை அடைந்ததும், இங்கே கொஞ்சம் உட்கார்ந்து ஓய்வு எடுத்தால்தான், உடலில் பழைய தெம்பு திரும்பவும் கிடைக்கும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

ஓரிடத்தில், அடர்ந்த கிளைகள் கொண்ட வில்வ மரத்தின் கீழே படர்ந்திருந்த நிழலைக் கண்டு, அங்கே கால்களை மடக்கியும் நீட்டியும் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டது பசு. அருகில் உள்ள காவிரி நதி நீரில் பட்ட காற்று, அப்படியே தவழ்ந்து வந்து வனத்தைச் சூழ்ந்துகொண்டது. பசுவின் மீதும் அந்தக் குளிர்ந்த காற்று வந்து மோத, அந்த இதத்தில் நெகிழ்ந்த அந்தப் பசு கழிவரக்கத்தோடு என் சிவனே.... இனியேனும் மனமிரங்கக்கூடாதா என் மீது? என்று கண்ணீர் விட்டது.

அந்தக் கண்ணீர், சிவத்தை அசைத்திருக்கும்போல! அந்த இடத்தில் நறுமணம் இன்னும் அதிகரித்தது. குளிர்ந்த காற்று சூழ்ந்துகொண்டு இடத்தை மகோன்ன்தமாக்கியது. வெயிலின் தாக்கம் குறைந்து பூமி குளிரத் துவங்கியது.

பூலோகத்தில் நான் பசுவாக அலைந்து திரிந்தது போதாதா? திரும்பவும் திருக்கயிலாயம் வரவேண்டும் என்று ஆசைப்படுவது உங்களுக்குப் புரியவில்லையா? சாபத்தைத் தந்த நீங்களே அதில் இருந்து விமோசனமும் எனக்குத் தந்தருளக்கூடாதா? இதோ.... இந்த ரம்மியமான இடத்தில் மீண்டும் உங்களை நினைத்து தவம் செய்கிறேன் என மனமுருகி வேண்டிக்கொண்டது பசு. அந்தப் பசு வேறு யாருமல்ல... சாட்ஷாத் பார்வதிதேவி தான்.

பசுவாக பூலோகத்தில் அவதரித்த தன் சகோதரிக்காக, அவளுக்குத் துணையாக தானும் பசுவாக உருவெடுத்து, அவள் போகும் இடங்களுக்கெல்லாம் கூடவே சென்று கொண்டிருந்தார் திருமால், அதன்படி இந்த இடத்துக்கும் வந்தவர். சூட்சுமமாக இங்கே சிவனார் குடிகொண்டிருப்பதை அறிந்தார். உமா இங்கே தவத்தில் ஈடுபடு. உன்னை சிவபெருமான் ஆட்கொள்ளும் தருணம் வந்துவிட்டது என அருளினார்.

பார்வதிதேவியின் தவத்தைக் கண்டு நெகிழ்ந்துபோன சிவனார்,. அங்கே உமையவளுக்கும் திருமாலுக்கும் திருக்காட்சி தந்தார். குளிர்ந்துபோன தேவி, மகிழ்ச்சியில் சிவனாரை நமஸ்கரித்து வணங்கினாள். இந்தத் தலத்திலேயே உன் சகோதரியை மணம் புரிந்துகொள்கிறேன் என திருமாலு<க்கு அருளினார் ஈசன். பிறகென்ன... அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சூழ... சிவ-பார்வதியின் திருமணம் இனிதே நடந்தேறியது. சகேதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர்பெருமக்களையும் முனிவர்களையும் வரவேற்று உபசரிப்பதற்காக ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தார் திருமால். அந்த இடத்தை எதிர்கொள்பாடி என்றும் மேலத் திருமணஞ்சேரி என்றும் அழைக்கின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் மேற்கு நோக்கியபடி அருள்கிறார்
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.