Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெற்றி வேலாயுதன்
  அம்மன்/தாயார்: தனி கோயிலில் வள்ளி, தெய்வானை
  தீர்த்தம்: முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது.
  ஊர்: கதித்த மலை
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  அருணகிரிநாதர்.  
     
 திருவிழா:
     
  தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி  
     
 தல சிறப்பு:
     
  வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஊத்துக்குளி-638 751, ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4294-262 052-54 
    
 பொது தகவல்:
     
  கோயில் அமைப்பு: குன்றின் மீது 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நிற்கிறது. கோயிலுக்கு செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. பிரகாரமும் இருக்கிறது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனி சன்னதி உள்ளது.

முருகனின் கோயிலுக்கு கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனி கோயில் உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் இந்த புற்றை "சுப்பராயர்' என அழைக்கிறார்கள். வள்ளி தெய்வானை சன்னதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் காவல் தெய்வமான சுக்குமலையான் சன்னதி உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்கு மலையானை வழிபாடு செய்கிறார்கள்.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கோயிலில் மூலவரான வெற்றி வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானை இல்லாமல் தனியாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.


வள்ளி தெய்வானை தனி சன்னதிக்கான காரணம்: சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது.


மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என் னும் மூன்று சக்திகளை குறிக் கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.


 
     
  தல வரலாறு:
     
 

முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென் றார். அவருடன் நாரதர் மற் றும் பல தேவர் களும் உடன் வருகின்றனர். பூஜைக் குரிய நேரம் வந்ததும் அகத்தியர் ஓரிடத்தில் முருகனுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கு தாகமும் ஏற்பட்டது. இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது.


அகத்தியரும் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்து கொண்டு தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப் பட்ட ஊற்று வற்றாமல் இன்று வரை நீரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் "ஊத்துக்குளி' என அப் பகுதி அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோயிலும் கட்டப்பட்டது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வள்ளி தெய்வானை தனி சன்னதியிலும் முருகன் தனி சன்னதியிலும் அருள் பாலிக்கின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar