Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பத்ரவல்லீஸ்வரர்
  அம்மன்/தாயார்: பத்ரவல்லியம்மன்
  தீர்த்தம்: வலி தீர்த்தம்
  ஊர்: திருவீழிமிழலை
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  இங்கு தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இல்லை என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில் திருவீழிமிழலை, திருவாரூர்.  
   
போன்:
   
  +91 94440 25239, 98400 53289. 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்திற்கு அருகில் பிதுர் தீர்த்த தலமான செதலபதி ராமநாதர் கோயில். கூத்தனூர் சரஸ்வதி கோயில் ஆகியவை உள்ளன. ஆன்மிக சுற்றுலா சென்று வர ஏற்ற தலம்.  
     
 
பிரார்த்தனை
    
  வலிப்பு, நரம்பு வியாதியால் அவதிப்படுபவர்கள், வலி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் நோயின் தீவிரம் குறைவதோடு விரைவில் நோய் குணமாகும் 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாற்றியும் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்கின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இங்கு காத்யாயன முனிவரின் மகளாக பார்வதி காத்யாயினி என்ற பெயருடன் வளர்ந்தாள். அவளை மணம் முடிக்க முதியவர் வடிவில் சிவன் வந்தார். ஒரு முதியவருக்கு தன் மகளைக் கட்டிக்கொடுக்க முனிவர் தயங்கினார். அப்போது ஈசன், தன் நெற்றிக் கண்ணைக் காட்டியதும் வந்திருப்பது இறைவன் என்பதை அறிந்து மகிழ்ந்தனர். சித்திரை மகநாளில் சிவபார்வதி திருமணம் இனிதே நிறைவேறியது. இங்குள்ள சிவனை மாப்பிள்ளை சுவாமி என்பர். சிம்மராசியினர் இவர்களைத் தரிசித்தால், திருமணத்தடை நீங்கி நல்ல துணை
கிடைக்கும்.

வலி தீர்த்தம்: இங்குள்ள தீர்த்தம் வலிதீர்த்தம் எனப்படுகிறது. ஒரு பெரிய குளம் கேணி வடிவில் இங்குள்ளது. வலிப்பு, நரம்பு வியாதியால் அவதிப்படுபவர்கள், இங்கு நீராடி சிவனை வழிபட்டால் நோயின் தீவிரம் குறைவதோடு விரைவில் நோய் குணமாகும். இங்கு தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இல்லை என்பது மாறுபட்டது.  புகழ் பெற்ற மாப்பிள்ளை சுவாமி கோயிலில், சுவாமி சந்நிதி முன் மணப்பந்தல் அமைக்கப்பட்டிருக்கும் என்பது சிறப்பு.

 
     
  தல வரலாறு:
     
 

புரூரவஸ் என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு நோய் உண்டானது. பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் தீரவில்லை. இறுதியாக திருவீழிமிழலை வீழிநாதரை வணங்கி தன் நோய்தீர சிவனிடம் முறையிட்டாள். அன்றிரவு அவளுடைய கனவில் சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் தோன்றி, பத்ரவல்லீ! திருவீழிமிழலையில் உள்ள தீர்த்தத்தில் நீராடி என்னை வழிபட்டால் நோய் நீங்கி சுகம் பெறுவாய்!, என்று அருள்புரிந்தார். அதன்படி அவளும் தீர்த்தத்தில் நீராடி சுகம் பெற்றாள். வலிப்புநோய் தீர்த்த சிவனுக்கு ஆலயம் எழுப்ப பத்ரவல்லி விரும்பினாள். அவளின் எண்ணத்தை நிறைவேற்ற முதற்கடவுளான விநாயகரை வணங்கினாள். விநாயகர் பணமூடை கொடுத்து உதவினார். அந்த பணத்தில் வீழிநாதர் கோயிலுக்குத் தெற்கே, பத்ரவல்லி சிவனுக்கு கோயில் நிர்மாணித்தாள். பத்ரவல்லியின் பெயரால் இங்குள்ள இறைவன் பத்ரவல்லீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகைக்கு பத்ரவல்லியம்மன் என்பது திருநாமம்.

மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் சிவனிடம், அதை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில், தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இதனால் தான் கோயில்களில் கண்மலர் காணிக்கை தரும் பழக்கம் உருவானது. இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்ராயுதத்தை கொடுத்தருளினார். விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக் காணலாம். இறைவனே இறைவனை பூஜித்த காரணத்தால் இத்தலத்தில், தேவதச்சனான மயன் விண்விழி விமானத்துடன் கோயிலை நிர்மாணித்தான்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இல்லை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar