Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாண்டேஸ்வரர்
  தல விருட்சம்: அஸ்வத்த மரம் (அரச மரம்)
  ஊர்: மங்களூரு
  மாவட்டம்: மங்களூரு
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  மே முதல்வாரம் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, கார்த்திகை தீபம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  நாம் ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் ஏற்பட்டால், சிவபூஜையில் கரடி புகுந்ததைப் போல என்று சொல்வோம். ஆனால், சிவபூஜையில் காளை புகுந்து பக்தர்களை ஆசிர்வதிப்பதை, இக் கோயிலில் காணலாம். சிவபெருமானின் ஜடாமுடி பரந்து கிடக்கிறது என்பதாலும், சுவாமிக்கு செய்யும் அபிஷேக புனித நீரை தாண்டி செல்லக்கூடாது என்பதாலும் சன்னதியை சுற்றி வரும் வழக்கம் இங்கு இல்லை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு, கர்நாடகா.  
   
போன்:
   
  +91 824- 244 1210  
    
 பொது தகவல்:
     
  கோயில் முகப்பு அலங்கார வளைவில் சிவன் சிலையும், எதிரில் நந்தியும் உள்ளது. பஞ்சுருளி, முண்டித்தாயா, வைத்தியநாகர் ஆகிய காவல் தெய்வங்களும் உள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவிதேவி, லட்சுமி நாராயணர் சன்னதிகள் இங்கு உள்ளன. 22 அடி உயர ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, கல்வியில் மேம்பட, விபத்துகளிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  மூலவருக்கு அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சிவபெருமானின் ஜடாமுடி பரந்து கிடக்கிறது என்பதாலும், சுவாமிக்கு செய்யும் அபிஷேக புனித நீரை தாண்டி செல்லக்கூடாது என்பதாலும் சன்னதியை சுற்றி வரும் வழக்கம் இங்கு இல்லை. நவக்கிரக மேடையில் அரசமரம் நிற்கிறது. கார்த்திகை சோமவார நாட்களில் ருத்ரயாகம், ருத்ர பூஜை நடக்கிறது. அப்போது, ருத்ராட்சம், லட்ச வில்வ இலை மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பயம் விலகும். மருத்துவமனை மற்றும் விபத்துக்களில் சிக்கியவர்கள் லட்ச வில்வ அர்ச்சனை செய்து சுவாமி, அம்பாளை வழிபடுகின்றனர்.

நந்தா தீபம்: ஒன்பது கண்களுடன் உள்ள பெரிய குத்து விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனை நந்தா தீபம் என்கின்றனர். இந்த தீபம் 365 நாட்களும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். இந்த தீபத்தில் பக்தர்கள் எண்ணெய் ஊற்றுகின்றனர். இதனால் கிரக தோஷம் விலகும். இரவு எட்டு மணியளவில் ரெங்காபூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள் கோயிலில் தீபங்களை வரிசையாக ஏற்றுகின்றனர். இங்குள்ள நாகப்புற்றுக்கு பால் அபிஷேகம் செய்வதால், குறைவில்லா செல்வம் கிடைப்பதாக நம்புகின்றனர்.

நந்தியின் வருகை: இங்குள்ள பசுமடத்தில் காளை மாடு ஒன்று வளர்க்கப்படுகிறது. மூன்று வயது கொண்ட இந்த மாடு பகல் ஒரு மணிக்கு நடக்கும் உச்சிக்கால பூஜையிலும், இரவு எட்டு மணிக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜையிலும் பங்கேற்கிறது. பூஜைக்கு மணி அடித்தவுடன், பசுமடத்திலிருந்து தானாகவே புறப்பட்டு மூலஸ்தானத்துக்கு வருகிறது. மூலஸ்தான படிக்கட்டில் ஏறி நிற்கிறது. உடனடியாக சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். சிறிது நேரம் சுவாமி முன்பு நின்றுவிட்டு, சன்னதியின் பின்புறம் செல்கிறது. பிறகு பசுமடத்திற்கு சென்று விடுகிறது. இதனைக் காண்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. காளையின் வாய்நுரை வாசனை பட்டால் தீராத நோயும் தீரும் என்பதால், நோயற்ற வாழ்வுக்காக குழந்தைகளுடன் பக்தர்கள் வருகின்றனர்.

ஜலதாரை வழிபாடு: பாண்டேஸ்வரருக்கு தாராபிஷேகம் நடக்கிறது. துளையிட்ட சிறு கலசத்தின் வழியாக புனிதநீர், நெய் முதலானவை சிவலிங்கத்தில் விழும்படி செய்கின்றனர். திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, கல்வியில் மேம்பட 108 கலச ஜலதாரை வழிபாடு செய்யப்படுகிறது.

அஸ்வத்த பூஜை: தலவிருட்சமாக அஸ்வத்த மரம் (அரச மரம்) கோயில் எதிரில் உள்ளது. இந்த மரத்தில் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் இருப்பதாக நம்பிக்கையுள்ளது. அநியாயம் செய்பவர்களால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மரத்துக்கு பூஜை செய்தால் நிவாரணம் கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. பவுர்ணமியில் சத்தியநாராயண பூஜை நடக்கிறது மாதப்பிறப்பான சங்கரமணா நாளில் (சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும் நாள்) 11 புரோகிதர்கள் நடத்தும் சதுர்தாபிஷேகம், ருத்ராபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும்.
 
     
  தல வரலாறு:
     
  தர்மர் சகுனியுடன் சூதாட்டத்தில் தோற்றார். திரவுபதியை பலர் முன்னிலையில் துரியோதனன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத அவள், போர்க்களத்தில் துரியோதனனின் தலை உருண்டால் தான், தன் கூந்தலை முடிவதாக சபதம் செய்தாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்கு புறப்பட்டனர். ஓரிடத்தில் அவர்கள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். அந்த லிங்கமே தற்போது மங்களூர் கோயிலில் உள்ளது. பாண்டவர்கள் வழிபட்டதால் பாண்டேஸ்வரர் என்று வழங்கப்படுகிறது. மகாலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நாம் ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் ஏற்பட்டால், சிவபூஜையில் கரடி புகுந்ததைப் போல என்று சொல்வோம். ஆனால், சிவபூஜையில் காளை புகுந்து பக்தர்களை ஆசிர்வதிப்பதை, இக்கோயிலில் காணலாம். சிவபெருமானின் ஜடாமுடி பரந்து கிடக்கிறது என்பதாலும், சுவாமிக்கு செய்யும் அபிஷேக புனித நீரை தாண்டி செல்லக்கூடாது என்பதாலும் சன்னதியை சுற்றி வரும் வழக்கம் இங்கு இல்லை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar