Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அய்யனார்
  அம்மன்/தாயார்: பூரணை, புஷ்கலை
  ஊர்: திருப்பட்டூர்
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை  
     
 தல சிறப்பு:
     
  கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார் மாசாத்தனார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அய்யனார் திருக்கோயில் திருப்பட்டூர், திருச்சி மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு தான் மிக பிரமாண்டமான கற்கோயிலாக அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. மண்ணால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தை கற்றளியாக மாற்றியது ராஜேந்திரசோழ மன்னன். மூன்று நிலை ராஜகோபுரம், அழகிய யானையின் திருமேனி, பலிபீடம், நட்சத்திர வடிவிலான யாகசாலை மண்டபம், திருச்சுற்று மாளிகை, அர்த்த மண்டபம்  என பிரமாண்டமாக திகழ்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள அய்யனாரை வழிபட்டால் விவசாயம் செழிக்கும், குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  அய்யனாருக்கும், பூரணை புஷ்கலைக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருக்கயிலாய உலா எனும் அரிய படைப்பினைக் கயிலாயத்தில் இருந்து பூவுலகுக்குக் கொண்டு வந்து, அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர், மாசாத்தனார். அப்படி அரங்கேற்றிய தலம் திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூர் திருத்தலம் என்கின்ற கல்வெட்டுகள். இதற்கு சாட்சியாக திருக்கயிலாய ஞான உலா அரங்கேறிய 18 கால் மண்டபம் இன்றைக்கும் உள்ளது.  ராஜேந்திர சோழன், குலோத்துங்கச் சோழன், விக்கிரமச் சோழன், வீரராமநாததேவன், சடையவர்ம சுந்தர பாண்டியன், சடாவர்ம வீரபாண்டியன், கெம்பைய மாயன நாயக்கர் போன் மன்னர்கள், திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், மாசாத்தனார் கோயிலுக்கும் ஏராளமான நிவந்தங்களை அளித்து திருப்பணி மேற்கொண்டுள்ளனர் என இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  
     
  தல வரலாறு:
     
  ராஜராஜ சோழ மாமன்னன், ஆழ்ந்த சிவபக்தி கொண்டவன். இதனால் அவனுக்கு சிவபாதசேகரன் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் சோழ தேசத்து மக்கள். அவனது வலதுகரமாகவும், சோழதேசம் செழித்து வளரக் காரணமாகவும் இருந்தவர் பிரம்மராயர். இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எனவே, வைஷ்ணவர் வணங்கும் வகையில், திருமாலின் திருத்தலங்களுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளான் ராஜராஜ சோழன். இதேபோல், பிரம்மராயரும் சைவக் கோயில்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார். இதன் அடுத்தடுத்த காலகட்டங்களில், வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கூடவே சைவ, வைணவ நியதிகளுக்கு அப்பாற்பட்ட தெய்வங்களையும் வணங்கத் துவங்கினர். மக்கள் அப்படி, சோழ தேசத்து மக்கள் வணங்கிய தெய்வம் தான் மாசாத்தனார்.
சங்க காலத்தில் சாத்தனார் வழிபாடு அதிக அளவில் இருந்தது. சாத்தனாரை வணங்கி விட்டுத்தான், மன்னர் சபையைக் கூட்டி ஆலோசிப்பார். போர் தொடுக்கப் பயணிப்பதற்கு முன், சாத்தனாருக்குப் படையல் போட்டுவிட்டுத்தான், படையோடு கிளம்பிச் செல்வார் அரசர். மாசாத்தனாரின் பேரருளை வியந்த மன்னர்கள் கருவூர் சேரமான் சாத்தான், பாண்டியன் கீரஞ்சாத்தான், சோழநாட்டுப் பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தான், ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தான் என, தங்களது பெயரில் சாத்தனாரின் திருநாமத்தையும் சேர்த்துக்கொண்டனர் என்று தெரிவிக்கிற கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் நிறையவே உண்டு. நாம் எல்லோரும் அறிந்த சீத்தலைச் சாத்தனார், உறையூர் முதுகன்னன் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார் போன்ற பெருமக்கள் பலரும் மாசாத்தனாரை வணங்கி, வரம் பெற்றுப் பலம் பெற்றவர்கள்.இந்த சாத்தனாரே பின்னாளில் சாஸ்தா என அழைக்கப்பட்டார். இவரே தற்போது அய்யனார் என்ற திருநாமம் பெற்றார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார் மாசாத்தனார்.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.