Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வேணுகோபாலன் ( கிருஷ்ணசுவாமி)
  உற்சவர்: வேணுகோபாலர்
  அம்மன்/தாயார்: ருக்மிணி, சத்யபாமா
  தல விருட்சம்: பாதிரி, பவளமல்லி
  தீர்த்தம்: ஹரிஹரதீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  புராண பெயர்: புன்னைவனக்ஷேத்ரம்
  ஊர்: அம்பாசமுத்திரம்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசியில் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தைவெள்ளியில் ஊஞ்சல் உற்ஸவம்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல பெருமாள், தனது பத்தினியரை பிரியாத மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு, நித்ய கல்யாண பெருமாள் என்றும் பெயருண்டு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம் - 627 401. திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4634 - 251 445. 
    
 பொது தகவல்:
     
  வைகாசியில் 10 நாட்கள் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கும். இவ்விழாவின் ஐந்தாம் நாளில் இங்குநடக்கும் "ஐந்து கருட சேவை' மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று வேணுகோபாலர் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள நவநீதிகிருஷ்ணர், லட்சுமிநாராயணர், சுந்தர்ராஜர், புருஷோத்தமர் ஆகிய கோயில்களில் இருந்து சுவாமிகள் இங்கு எழுந்தருளி கருடசேவை காண்கின்றனர். சுவாமி புன்னை வனத்தின் மத்தியில் எழுந்தவர் என்பதால், பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், புன்னை வாகனத்தில் எழுந்தருளுகிறார். புரட்டாசி சனிக்கிழமைகளிலும் கருடசேவை உண்டு.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயிலில், சுவாமி ருக்மிணி, சத்யபாமாவைப் பிரியாமல் காட்சி தருகிறார். எத்தனை பிறவி எடுத்தாலும், இணைபிரியாத வாழ்க்கைத்துணை அமைய, இங்கு சென்று வரலாம்.

நித்யகல்யாண பெருமாள்: வேணுகோபாலர் சிலை, சாளக்ராமத்தால் (நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கும் கருப்பு நிற கல்) செய்யப்பட்டதாகும். சுவாமியின் தலைக்கு மேலே ஆதி சேஷன் குடையாக இருக்கிறார். அருகில் ருக்மணி, சத்யபாமா இருக்கின்றனர். இவருக்கு எண்ணெய்க்காப்பும், பால் திருமஞ்சனமும் செய்கிறார்கள். உற்சவமூர்த்தியும் இதே அமைப்பில் இருக்கிறார். இவர் ஒருபோதும் தாயார்களைப் பிரிவதில்லை. கருடசேவையின் போதும், தாயார்களுடனேயே எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி திருவிழாவின்போது, சுவாமியின் பிரதிநிதியாக சக்கரத்தாழ்வார்தான் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுவார். ஆனால் இங்கு சுவாமியே, தாயார்களுடன் தாமிரபரணிக்குச் சென்று தீர்த்தவாரி காண்கிறார். வைகுண்ட ஏகாதசியன்றும் தாயார்களுடன்தான் சொர்க்கவாசல் கடக்கிறார்.

இத்தல பெருமாள், தனது பத்தினியரை பிரியாதவர் என்பதால் இவருக்கு, "நித்ய கல்யாண பெருமாள்' என்றும் பெயருண்டு. திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமையவும், தம்பதியர் எத்தனை பிறவி எடுத்தாலும் சேர்ந்து வாழவும் இவரை வணங்கு கிறார்கள். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் 9 ம்நாளும், வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளும் சுவாமிக்கு மோகினி அலங்காரம் செய்யப்படும். அன்று சுவாமி பெண் அம்சமாக இருப்பதால், அன்றுமட்டும் அவருடன் ருக்மிணி சத்யபாமா இருக்கமாட்டர்.

தோஷம் நீக்கும் பெருமாள்: நவக்கிரக தோஷங்களை நீக்கும் மூர்த்தியாக இங்கு சுவாமி அருளுகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சுவாமிக்கு எள்சாதம் நைவேத்யம் செய்து வணங்குகின்றனர். மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற,புதன் கிழமைகளில் பாசிப்பயறு படைத்து வழிபடுகிறார்கள். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் "ஐந்து கருட சேவை' நடக்கும். அப்போது வேணுகோபாலர் மற்றும் இதே ஊரிலுள்ள நவநீதகிருஷ்ணர், லட்சுமிநாராயணர், சுந்தர்ராஜர், புருசோத்தமர் கோயில்களில் இருந்து சுவாமிகள் இங்கு எழுந்தருளி கருடசேவை காண்பர்.

நெல் பிரசாதம்: கிருஷ்ணஜெயந்தியன்று சுவாமிக்கு கண்திறப்பு மற்றும் சங்குப்பால் தரும் வைபவம் நடக்கும். அன்று ஒரு தேங்காயை சுவாமியின் பாதத்தில் வைத்து, அதன் மூன்று கண்களையும் திறப்பர். அதன்பின் சிறிய சங்கில், பால் எடுத்து அதை உற்சவமூர்த்திக்கு புகட்டுவதுபோல பாவனை செய்வர். அன்று பக்தர்களுக்கு நெல் பிரசாதம் தரப்படும். கிருஷ்ணர் பிறந்ததும், உலகம் செழிப்பாக இருந்ததை நினைவுறுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை, நாம் வாங்கும் அரிசியுடன் கலந்துவிட்டால், அன்னத்திற்கு எப்போதும் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.

 
     
 
பிரார்த்தனை
    
 

தம்பதியர் ஒற்றுமையுடன் வாழவும், குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.


நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் விரைவில் வரன் அமைவதாக நம்பிக்கை.

 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வேணுகோபாலர், மூலஸ்தானத்தில் கையில் புல்லாங்குழல் வைத்து வாசித்தபடி, வலது காலை சற்றே பின்புறமாக மடக்கி மோகன கோலத்துடன் காட்சியளிக்கிறார். தலைக்கு மேலே, 9 தலைகளுடன் ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். சுவாமிக்கு அருகில் ருக்மிணி, சத்யபாமா இருவரும் இருக்கின்றனர். இவர் எப்போதும் தாயார்களை விட்டு பிரிந்து செல்வதில்லை. கருடசேவையின்போதும், தாயார்களுடன்தான் எழுந்தருளுகிறார். பொதுவாக கோயில்களில் தீர்த்தவாரி திருவிழாவின்போது, சுவாமியின் பிரதிநிதியாக சக்கரத்தாழ்வார்தான் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுவார். ஆனால் இங்கு சுவாமியே, தாயார்களுடன் தாமிரபரணிக்கரைக்கு சென்று தீர்த்தவாரி காண்கிறார்.இதேபோல் வைகுண்ட ஏகாதசியன்று தாயார்களுடன்தான் சொர்க்கவாசல் கடக்கிறார். இவ்வாறு இத்தல பெருமாள், தனது பத்தினியரை பிரியாத மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு, "நித்ய கல்யாண பெருமாள்' என்றும் பெயருண்டு. வைகாசி பிரம் மோற்ஸவத்தின் 9 ம்நாளிலும், வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளிலும் சுவாமிக்கு "மோகினி அலங்காரம்' செய்யப்படுகிறது. வருடத்தில் இந்த இரண்டு நாட்கள் மட்டுமே சுவாமியை, தனித்து தாயார்கள் இல்லாமல் தரிசிக்க முடியும்.

தோஷம் நீக்கும் பெருமாள்: தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. சுவாமிக்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது. மூலவர் வேணுகோபாலரின் சிலை, சாளக்ராமத்தால் செய்யப்பட்டது. எனவே, தினமும் காலையில் எண்ணெய்க்காப்பும், அதன்பிறகு பால் திருமஞ்சனமும் செய்கிறார்கள். உற்சவர், மூலவரின் அமைப்பிலேயே காட்சி தருகிறார்.

இங்கு சுவாமி, நவக்கிர தோஷங்களை நீக்கும் மூர்த்தியாக அருளுகிறார். எனவே கிரக தோஷம் உள்ளவர்கள், அந்தந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் இவருக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். சனிப்பெயர்ச்சியால் தோஷம் ஏற்பட்டவர்கள், இவருக்கு சனிக்கிழமைகளில் எள்சாதத்தை படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற, புதன்கிழமைகளில் இவருக்கு பச்சைப்பயிறு படைத்து வழிபடுகிறார்கள்.முன் மண்டபத்தில் வடக்கு நோக்கி "பக்த ஆஞ்சநேயர்' இருக்கிறார்.

நெல் தானிய பிரசாதம்: கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு கண்திறப்பு மற்றும் சங்குப்பால் தரும் வைபவம் நடக்கிறது. அன்று ஒரு தேங்காயை சுவாமி பாதத்தில் வைத்து, அதன் மூன்று கண்களை திறக்கின்றனர். கிருஷ்ணர் பிறந்ததன் ஐதீகத்தில் இவ்வாறு செய்கின்றனர். அதன்பின்பு சிறிய சங்கில், பால் எடுத்து அதை உற்சவமூர்த்திக்கு புகட்டும்படியாக பாவனை செய்வர். அதன்பின்பு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெல் தானியத்தை பிரசாதமாக தருகின்றனர். கிருஷ்ணர் பிறந்தபிறகு உலகு செழிப்பாக இருந்ததை நினைவுறுத்தும்வகையில் நெல் தானிய பிரசாதம் தருகின்றனர். இத்தலத்தில் மூலவரின் மேல் உள்ள விமானம் பத்மவிமானம் எனப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான் அம்மன்னனுக்கு, சுவாமிக்கு தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது.ஒருசமயம் பெருமாள் அவனது கனவில் தோன்றி, தாமிரபரணி நதிக்கரையில், புன்னை வனத்தைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். தான் கனவில் கண்டபடியே ருக்மிணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலருக்கு சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினான். சுவாமிக்கு கிருஷ்ணசுவாமி என்ற பெயரும் உண்டு. இக்கோயில், "கிருஷ்ணன் கோயில்' என்றால்தான் தெரியும்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல பெருமாள், தனது பத்தினியரை பிரியாத மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு, நித்ய கல்யாண பெருமாள் என்றும் பெயருண்டு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar