Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தண்டாயுதபாணி
  உற்சவர்: தண்டாயுதபாணி
  ஊர்: நேதாஜி ரோடு
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கந்தசஷ்டி விழா, பங்குனி பிரம்மோற்ஸவம், கார்த்திகை நட்சத்திரத்தில் முருகன் வீதியுலா, வைகாசிவிசாகம், தைப்பூசம், விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  அலங்காரம் செய்தே பிரபலமான கோயில் இது. பெரும்பாலும் மூலவர் முருகன் ராஜாங்கக் கோலத்திலேயே காட்சி தருவார். பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை-625 001.  
   
போன்:
   
  +91 452 234 2782 
    
 பொது தகவல்:
     
  மகாமண்டபத்தில் மகா கணபதி, துர்க்கை, நாகராஜர், யோக ஆஞ்சநேயர், பரமேஸ்வரர், யோகதட்சிணாமூர்த்தி, காலபைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தில் கன்னிமூலவிநாயகர், வீரபத்திரர், பேச்சியம்மன், அங்காளஈஸ்வரி சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு கந்தசஷ்டி விழா ஐப்பசியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயிலில் தங்கும் வசதி இல்லாததால், பக்தர்கள் கோயிலுக்கு வந்து காப்பு கட்டிக் கொண்டு, வீட்டிலேயே விரதத்தை மேற்கொள்கின்றனர். குழந்தையில்லாதவர்கள் இம்முருகனை எண்ணி சஷ்டிவிரதம் இருந்தால் மழலைச் செல்வம் உண்டாகும் என்பது நம்பிக்கை.காலபைரவரை தேய் பிறை அஷ்டமி மற்றும் ஞாயிறு ராகுகாலத்தில் வழிபட்டால் எந்தத் தடையையும் தாண்டி நமது திட்டங்களில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 
    
நேர்த்திக்கடன்:
    
  விரதமிருக்கும் தம்பதிகள் சஷ்டியின் ஆறு நாட்களும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  முன்மண்டபத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச் செந்தூர்,பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.  கருவறையில் முருகப் பெருமான் கோவணத்துடன் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். வலதுகையில் தண்டம் ஏந்தியுள்ள இவர், இடதுகையை இடுப்பில் வைத்துள்ளார். பெரும்பாலும் மூலவர் முருகன் ராஜாங்கக் கோலத்திலேயே காட்சி தருவார்.  
     
  தல வரலாறு:
     
  சிவபெருமானின் தோழராக இருந்து, நாயன்மார் வரிசையில் இடம்பிடித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் ஏழாம் நூற்றாண்டில் மதுரைக்கு யாத்திரை வந்த போது, இந்த முருகன் கோயிலில் தங்கினார். சுந்தரர் தங்கிய காரணத்தால் "சுந்தரர் மடம்' என்று இந்தக் கோயில் அழைக்கப்பட்டது. இங்கிருந்தே சுந்தரர் திருப்பரங்குன்றம் முருகன்கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். இந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டில் இருந்தே இங்கு உள்ளது. இங்குள்ள உற்சவ முருகன் சிலையை, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சில பக்தர்கள் தலைச்சுமையாக பழநி மலைக்கு எடுத்துச்செல்வார்கள். அங்கு சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் மதுரை கொண்டு வரப்படும். பிற்காலத்தில் இந்த வழக்கம் நின்றுபோனது. பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அலங்காரம் செய்தே பிரபலமான கோயில் இது. பெரும்பாலும் மூலவர் முருகன் ராஜாங்கக் கோலத்திலேயே காட்சி தருவார். பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு "தண்டாயுதபாணி' என்ற பெயர் ஏற்பட்டது. "மதுரை பழநியாண்டவர்' என்ற பெயரும் உண்டு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar