Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அகத்தீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர்
  அம்மன்/தாயார்: மங்கை நாயகி, பாகம்பிரியாள்
  தல விருட்சம்: வன்னி, அகத்தி
  தீர்த்தம்: அகத்திய தீர்த்தம் (கோயிலின் மேற்புறம் உள்ளது). அக்னிதீர்த்தம் (கடல்) அருகாமையில் உள்ளது.
  புராண பெயர்: அகஸ்தியான்பள்ளி
  ஊர்: அகஸ்தியன் பள்ளி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருஞானசம்பந்தர்



தேவாரபதிகம்



ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.



-திருஞானசம்பந்தர்



தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 126வது தலம்.



 
     
 திருவிழா:
     
  சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை  
     
 தல சிறப்பு:
     
  இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 190 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில் சேது ரஸ்தாசாலை, அகஸ்தியம்பள்ளி அஞ்சல் - 614 810 (வழி) வேதாரண்யம் வேதாரண்யம் வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4369 - 250 012 
    
 பொது தகவல்:
     
 

ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது.


இராசராசன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு உள்ளன.


சுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது.


மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப்பலகையும் அகஸ்தியர் கோயில் என்றே எழுதப்பட்டுள்ளது.


 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

எமன் வழிபட்ட சிறப்புடையது.


 இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன.


 
     
  தல வரலாறு:
     
 

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் திரண்டிருந்தனர். இதனால் வடதிசையிலிருந்த கைலாயம் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த சிவபெருமான் அகத்தியரை அழைத்து, தென்திசைக்கு செல்லும்படி உத்தரவிட்டார்.


சிவனின் ஆணைப்படி அகத்தியர் தென்திசைக்கு சென்றார். செல்லும் வழிகளில் சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து வழிபாடு நடத்தினார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் அகத்தியருக்கு சிவன் திருமணக்காட்சி தந்து அருளினார். இதனால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் ஆனார். அகத்தியர் திருவுருவம் கோவிலில் உள்ளது.


குலசேகரப்பாண்டியனுக்கு இருந்த வியாதிபோக்க இத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றதாக வரலாறு.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar