தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
மாட்டுப்பொங்கல் தினத்திலேயே கனு என்ற பண்டிகையும் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. நோன்புக்கு இணையாக இந்த கனுப்  பொங்கலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உடன் பிறந்த சகோதரர்களின் நலனுக்காக சகேதரிகள் நோன்பு  நோற்பர். மேலும் முதல் நாள் சங்கராந்தியில் வைத்து வழிபட்ட புது மஞ்சளை மூத்த பெண்களிடம் கொடுத்து, அந்த மஞ்சளை தம்  நெற்றியில் தீற்றி மஞ்சள் அடையாளம் இடச்சொல்லி பின்னர் மஞ்சள் நீராடுவர். மாட்டுப் பொங்கல், வடநாட்டில் கொண்டாடப்படும் கோ  பூஜையும் ஒன்றே. காமதேனுவின் சந்ததிகளாக பசுக்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. தமிழர்கள் பசுக்களை வழிபடுவது  போலவே கோ பூஜையிலும் பசுக்கள் பூஜிக்கப்படுகின்றன. வேத மந்திரம் முழங்க கோ மாதா பூஜிக்கப்படுகிறாள்.

காயத்ரி மந்திர விழா

பொங்கல் பண்டிகை முற்காலத்தில் சூரியவிழா என்றே அழைக்கப்பட்டது.

* பொங்கல் பண்டிகை தினமே விண்ணவரின் விடியற்காலை தொடங்கும் நாள். சூரியனுக்கு உரிய காயத்ரி மந்திரவிழாவே பொங்கல்  திருநாள் என்பது பீஷ்மர் வாக்கு.

* மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினம் என்பதால் பொங்கல் திருநாளுக்கு மகர சங்கராந்தி என்று பெயர்.

* இந்திர உபேந்திர சகித சூரிய நாராயணம் பூஜயாமி என்று பொங்கலன்று சூரியனை பூஜித்தல் வேண்டும்.கோ பூஜையிலும் பசுக்கள்  பூஜிக்கப்படுகின்றன. வேத மந்திரம் முழங்க கோ மாதா பூஜிக்கப்படுகிறாள்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.