தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > சங்காபிஷேகம்
சங்காபிஷேகம்
கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவன்கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சங்குக்கு ‘பவித்ரா (புனிதமான) பாத்திரம் ’ எனப் பெயருண்டு. அதில் விடப்படும் தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. சங்கு பஞ்சபூதங்களாலும் மாறுபடாதது. நீரில் கிடைப்பது. நெருப்பால் உருமாறாதது. இதிலுள்ள துவாரத்தினில் காற்றைச் செலுத்தினால் சுநாதமான ஒலியை வழங்குவது. அதனால்தான் கார்த்திகை சோமவாரத்தில் அனைத்து சிவன்கோயில்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

அதிலும் வலம்புரிச் சங்கு விசேஷம். லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். சங்கை இழைத்து தேன் முதலியவற்றுடன் அளிக்க பல நோய்களை தீர்க்கும் என்கின்றது வைத்ய சாஸ்திரம். சந்திரன் சிவபெருமானை வழிபட்டே வளர்ச்சி பெற்றான். கார்த்திகை மாதம் விருச்சிக மாதம். சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி ஆகிய மூன்றும் சேர்ந்த நாளில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது. கார்த்திகை மாதம் முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும் என்று சிவாகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் தீப ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சமன் செய்யவும், சிவரூபத்தை குளிரவைக்கவும் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.

கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது. சங்கினில் நிரப்பப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய சோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வதும், அதைக் காண்பதும் மிக விசேஷம்.

சந்திரன் இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர். சந்திர அம்சமான சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் அதைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும் நோயற்ற நல்வாழ்க்கையையும் அருளும்.

சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் ஆயிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளி பெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூரியனின் காயத்ரி மந்திரத்தையே சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன. சிறப்புவாய்ந்த கார்த்திகை மாதத்து சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும்பேற்றினை அருளக்கூடியது. சங்கு அபிஷேகம் காண்போம்! சங்கடங்கள் நீங்கப் பெறுவோம்!

திருக்கடையூர் சங்காபிஷேகம் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிவபெருமான் மார்க்கண்டேயரால் அபிஷேகம் செய்யப்பட்டவர். இங்கு சங்காபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தீர்த்தத்தில் 100க்கும் மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த அபிஷேக தீர்த்தம் பல நோய்களைத் தீர்க்கும் சக்தி உடையது.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.