தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > ராதாஷ்டமி
ராதாஷ்டமி
பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். தற்காலத்தில் கூறுவது போல சொல்ல வேண்டுமென்றால், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தநாள் என்று கொள்ளலாம். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள். ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதாவைப் பற்றிய கருத்துக்கள் மற்றும் தவறான கருத்துக்கள்:

புனிதமான அன்பிற்கும், பக்திக்கும் ராதா ஓர் எடுத்துக்காட்டு என்று சிலர் கூறுவர். பலவிதமான கலை படைப்புகளிலும், ராதா கிருஷ்ணனை நேரடியாகக் காணலாம். ராதா, கிருஷ்ணனை மணம் புரிந்து கொண்டதாக சிலர் கதை கூறுவர். கிருஷ்ணரை விட ராதா வயதில் மூத்தவர் மணமானவள். இருந்தும் கிருஷ்ணரிடம் ஈர்க்கப்பட்டு அவருடைய சிநேகத்தை எப்போதும் விரும்பியதாகக் கூறுவாரும் உண்டு. அதற்கு மேலாக, ராதையை மிகவும் கீழ்த்தரமாக விலைமாதுவெனச் சொல்வாரும் உண்டு. தற்காலத்தில் கூட கிருஷ்ணருடனேயே ராதா வாழ்ந்தாள் - ஒரு கோபிகையாக, என்றும் சொல்கிறார்கள். கிருஷ்ணர், மதுராவிற்குச் செல்லுமுன் விருந்தாவனத்தில் இருந்தார். அப்போதுதான் ராதா கிருஷ்ணனுடன் இருந்தாள். விருந்தாவனை விட்டு மதுரா சென்ற கிருஷ்ணன். மறுபடியும் திரும்ப வரவேயில்லை. விருந்தாவனத்தை விட்டு சொல்லும் போது கிருஷ்ணனுக்குப் பனிரெண்டு வயது கூட நிரம்பவில்லை.

வாலிபப்பருவம் கூட வராத, ஒரு பனிரெண்டு வயது பாலகன் எவ்வாறு தவறாக நடந்து கொள்ள முடியும்? இத்தகைய தவறான கருத்துக்களால், அதை மேன்மேலும் ஊதிப் பெரிதாக்குவதால் ராதாவுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையேயான புனிதமான தொடர்பு களங்கப்படுத்தப்படுகிறது. ராதா-கிருஷ்ணர் இருவரும் சேர்ந்து இருக்கும் படங்களில் ஒரு அழகான வாலிபனைப் போல கிருஷ்ணர் வரையப்படுகிறார். பத்துப் பனிரெண்டு வயதுச் சிறுவனைப் போல் வரையப்படுவதில்லை. இவ்விருவரைப் பற்றிய தவறான கருத்துகள் பரவுவதற்கு, இத்தகைய படங்களும் காரணமாக இருக்கலாம். ராதா என்றால் என்ன என்பதை ஆழ்ந்து ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்தால் தான், இத்தகைய கலை படைப்புகளின் உண்மையான அர்த்தம் தெளிவாகும்.

ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது தா என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல் தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை செலுத்துகிறோமோ அப்போது நமக்குள் இருக்கும் உண்மையான ஸ்வரூபத்தையும் அண்டத்தில் விரவி இருக்கும் சாந்நித்தியத்தையும் அறிந்து கொள்ளும் பேறு பெறுகிறோம். நான் எனும் பிடிப்பை தளர்த்தாவிட்டால் எந்தப் பயனும் இல்லை. அகில உலகின் சிறு அங்கமாக இருக்கும் மனிதனுக்குள்ளும் இப்பேரண்டத்திலும், விரிந்து பரந்து இருப்பது தெய்வீகமே என்பதை நான் எனும் பிடிப்பைத் தளர்த்தினால்தான் உணர முடியும் என்ற பேருண்மையை ராதா என்ற வார்த்தை உணர்த்துகிறது. வரையறையில்லாமல் எந்தக் கட்டுபாட்டிற்கும் உட்படாது இறைவனின் பாதங்களை சரணடைவதே சரணாகதி, உண்மையான பக்தி, நம்பிக்கையுடன், தெய்வீகத்தின் மேல் நாம் வைக்கும் ஆழ்ந்த அன்பையே ராதா என்று குறிப்பிடலாம்.

வரலாற்றில் ராதா: ராதா, சரித்திரங்களில் நீங்கள் இடம் பெற்றவள். புராணங்களில் ராதா என்ற கோபிகை, கிருஷ்ணனை சந்திக்கும் முன்னரே திருமணமானவள். மதுராவை ஆண்ட கொடிய கம்சனின் படைத்தலைவனாக இருந்தவன் ராதாவின் கணவன். அவனுக்கு நம்பிக்கைக்குரிய போர் வீரன். அவனை எல்லைப்புறக் காவலுக்கு, தேசத்தின் வடக்கு எல்லைக்குப் போர் புரிய அனுப்பிய சமயம். ராதா அருகில் வசித்த குழந்தைகளுடனும் கிருஷ்ணனுடனும் விளையாடிப் பொழுது போக்கியிருக்கலாம். இதைத் தவிர்த்து கிருஷ்ணன் - ராதாவிற்கு இடையேயான நட்பை களங்கமாக்கி கூறுவது சரியல்ல. ராதா பிறந்த இடம் பிரம்மஸரின் தற்காலத்தில் பர்சானா என்று அழைக்கப்படுகிறது. மதுராவில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. ராதாவின் கணவன் பெயர் அபிமன்யு ஐடிலா தேவி என்பது அபிமன்யுவின் தாயார் பெயர். குடிலா தேவி என்பது அவனது சகோதரியின் பெயர். ராதாவின் தந்தை வ்ருஷபானு, தாய் பெயர் கீர்த்திதா, இவ்விவரங்கள் பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புராணம், நாரத புராணம் மற்றும் கர்க சம்ஹிதாவில் காணலாம்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.