தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > பைரவாஷ்டமி!
பைரவாஷ்டமி!
கிரகங்கள் இவருக்குள் அடக்கம்!

கடுமையான கிரக தோஷம் உள்ளவர்களிடம் பைரவரை வழிபடுங்கள் என அறிவுரை சொல்வது வழக்கம். இதற்கு காரணம்,பைரவருக்குள்ளேயே 12 ராசிகளும்அடங்கியிருப்பதால் தான். இவரை கால பைரவர் என்று குறிப்பிடுவர்.இவர் காலத்தின் வடிவமாக இருக்கிறார்.எந்த காலத்தில் எந்த துன்பம் வர இருந்தாலும், இவரது பக்தர்களை அவைஅண்டுவதில்லை. இவரது ஒவ்வொரு அங்கமும் ஒரு ராசியாக உள்ளது. மேஷம்- சிரசு(தலை) ரிஷபம்-வாய் மிதுனம்- கைகள் கடகம்-மார்பு சிம்மம்- வயிறு கன்னி-இடுப்பு துலாம்- பின் பக்க பிட்டம் விருச்சிகம்-பிறப்புறுப்பு தனுசு-தொடை மகரம்- முழந்தாள் கும்பம்- கால்களின் கீழ்ப்பகுதி மீனம்- பாதத்தின் அடிப்பகுதி

பைரவரின் நாய்க்கு என்ன பெயர்?

நம் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ஜிம்மி, டாமி என்று பெயர் வைக்கிறோம் இல்லையா! அதுபோல, பைரவரின் நாய்க்கும் சில பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பைரவருக்கு நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. நாய் எந்த ஒரு மோசமான உணவையும் தின்னும் பழக்கமுள்ளது.நாம் செய்யும்படுமோசமான செயல்களால் ஏற்பட்ட பாவத்தைக் கூட, மனம் திருந்தி இவரை வணங்கிவிட்டால் கழுவி விடுவார்என்பதன் அடையாளமே இது. காசியில் காவல் பணியில் இவர் இருப்பதால், காவல் பிராணியான நாயைக் கொண்டுள்ளார்என்பர். நாயை வேதஞாளி என்பர்.இதை வேதத்தின் அடையாளமாகவும் கொள்வர். இந்த நாய்க்கு சாரமேயன் என்று பெயர் இருப்பதாக ரூப மண்டபம்என்னும் நுõலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வளவு சக்தி தெரியுமா?

பைரவரின் சக்தி பற்றி சுப்ரபேதாகமம் என்ற நுõலில் விவரிக்கப்பட்டுள்ளது. இவர்சிவபெருமானின் அம்சம். இந்த பிரபஞ்சத்தையேஆட்டிப்படைக்கும் அளவற்ற சக்தி படைத்தவர் சிவன். அந்த சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர் பைரவர். சிவபெருமானின்நேரடி சக்தி என்பதால், இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவே கிடையாது.

சொல்லுக்கு பொருள்!

பைரவர் என்ற சொல்லுக்குஅச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர் என்று பொருள். சிவபெருமான் அசுரர்களையும், தனக்கு அடங்க மறுத்தஅரசர்களையும் எதிர்த்து போரிடும் போது ஏற்ற வடிவமே பைரவக் கோலம். இவர் ஆயுதங்களை எடுக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை.சத்தம் போட்டாலே போதும்! எதிரிகள் அடங்கிப் போவார்கள். இவரை வைரவர்என்று கிராமப்புறங்களில் சொல்வர். நவரத்தினங்களில் வைரத்தின்ஒளி பிரமிப்பு தருவதாக இருக்கும். அதுபோல், பக்தர்கள் மனதில் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் என்னும் ஒளியேற்றுபவர் என்பதால், இப்பெயர்ஏற்பட்டது.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.