தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > மீனாட்சி திருக்கல்யாணம்
மீனாட்சி திருக்கல்யாணம்
மீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. இவள் முற்பிறவி ஒன்றில், வித்யாவதி என்னும் பெயரில் மீனாட்சியின் பக்தையாக இருந்தாள். தன் வாழ்நாளை, மீனாட்சியின் திருப்பணிக்காகவே அர்ப்பணித்தாள். கோயிலைச் சுத்தம் செய்வாள். மீனாட்சியை தன் மகளாக எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னைப் பெறாத அந்தத்தாய்க்கு மீனாட்சி காட்சியளித்து, ""என்னை மகளாய் நினைப்பவளே! உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றாள்.அம்மா, ""பிறவி என்ற ஒன்று வேண்டாம். அப்படி இருந்தால், இனி வரும் பிறவி ஒன்றில் எனக்கு நீ மகளாய்ப் பிறக்க வேண்டும். உன்னைப் பெற்ற பயனால் நான் முக்தியடைய வேண்டும், என்றாள் அந்தப்பெண்.மீனாட்சி மனமுவந்து அந்தவரத்தை வழங்கினாள். அதுமட்டுமல்ல, அப்பிறவியில் கோயிலில் குப்பை கூட்டுபவளாக இருந்தவள், இன்னொரு பிறவியில் மகாராணியாகப் பிறந்தாள். பெயர் காஞ்சனமாலை. "காஞ்சனா என்றால் "தங்கம். தங்கமாலை எவ்வளவு அழகாக இருக்குமோ, அதுபோல் அழகு படைத்தவள் காஞ்சனமாலை.அவள் மதுரை மன்னன் மலையத்துவஜனை திருமணம் செய்தாள். பாண்டியர்களின் கொடியில் "பொதிகை மலை தான் சின்னமாக இருந்துள்ளது. "மலையத்துவஜனை "மலை+ துவஜன் என்று பிரிப்பார்கள். "துவஜம் என்றால் "கொடி. "மலைக்கொடியை உடையவன் என்று இதற்குப் பொருள். மீனாட்சியின் பிறப்புக்கு பிறகு தான் அவர்கள் மீன்கொடிக்கு மாறியிருக்க வேண்டும்.இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, பெரியோர் அறிவுரைப்படி புத்திரப்பேறுக்கான யாகம் செய்தான். அந்த யாகத்தீயில் இருந்து எழுந்த மூன்று வயது பெண் குழந்தை அவனது மடியில் அமர்ந்தது. அவளுக்கு "தடாதகை என்று பெயரிட்டனர். பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்கள் இருந்ததால் பெற்றோர் கவலை கொண்டனர்.அப்போது, அசரீரி ஒலித்தது.""மகனே! கவலை வேண்டாம். இவள் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விதி இருக்கிறதோ, அவர் அவள் எதிரே வரும் போது, ஒரு ஸ்தனம் மறைந்து விடும், என்றது.அவளை ஆணுக்கு நிகராக பெற்றோர் வளர்த்தனர். வயது வந்ததும் பட்டம் சூட்டினர். அந்த பட்டத்துராணி உலகையே வென்றாள். கடைசியாக, கைலாயத்துக்குப் போருக்கு அழைத்த போது, சிவபெருமான் அவள் எதிரே வர ஸ்தனம் மறைந்தது. தன் மணாளன் அவர் என்பதை அறிந்து போரை நிறுத்தினாள். மாப்பிள்ளை மிகவும் அழகானவராக இருந்ததால், "சுந்தரேஸ்வரர் என பெயர் பெற்றார். "சுந்தரம் என்றால் "அழகு. மதுரை வந்து மீனாட்சிக்கு மாலையிட்டார். மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்றார். அவரை "சுந்தர பாண்டியன் எனமக்கள் அழைத்தனர்.தாய், தந்தையின் திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம் முருகனும், தங்கையை தாரை வார்த்துக்கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர். மதுரையில் பெண்களுக்கே மவுசு அதிகம். அவர்களுக்கெல்லாம் மாங்கல்ய பாக்கியம் தந்து, மங்கல வாழ்வு அளிக்கிறாள் மீனாட்சி.

முதல் விருந்து யாருக்கு?: மணமகனாக கைலாயத்தில் இருந்து எழுந்தருளியிருக்கும் சுந்தரேஸ்வரரோடு, சிவகணங்களும் உடன் வந்தன. இதில் குண்டோதரனும் அடக்கம். அவனுக்கு கல்யாணச் சாப்பாடு வழங்கும் சடங்கு திருமண விருந்தில் முக்கியமானது. பழைய கல்யாண மண்டபத்தில் குண்டோதரனுக்கு சிலை உள்ளது. அவருக்கு மதியம் தயிர் சாதம், இளநீர் ஆகியவற்றை நை@வத்யமாக படைத்து வழிபடுவர். இதன் பின்னரே, மணமக்களுக்கு திருமண விருந்து நைவேத்யம் செய்யப்படும்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.