தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > மாசி பவுர்ணமி
மாசி பவுர்ணமி
மாக மேளா: மாக மேளா, மாசி பவுர்ணமி என்றெல்லாம் வட இந்தியப் பகுதிகளில் கொண்டாடப்படும் பெருந்திருவிழாவின் முக்கியமான அம்சம், புனித நீராடல்தான், தை மாத அமாவாசையை அடுத்து சாந்திரமான முறையில் மாக மாதம் என்று கணக்கிடுவது வழக்கம். ஆக, மாக (மாசி) மாதத்தில் நடைபெறும் நீராடல் திருநாள் இது. பிரம்ம வைவர்த்த புராணப்படி இந்நாளில் மகாவிஷ்ணு கங்கையில் உறைவதாகக் கூறப்படுகிறது. ஆகையால், அன்றைய தினத்தில் கங்கை நீரை தொட்டாலே புண்ணியம் கிட்டும் என்று நம்பப்படுகிறது. பல வகை தானங்கள், தர்மங்கள், விரதங்கள் இருப்பதைக் காட்டிலும், மாக பவுர்ணமி அன்று கங்கையில் நீராடினால் மகாவிஷ்ணு மிகவும் மகிழ்ந்து நமக்கு அருள்கிறார். இதற்காக அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒன்று கூடும் இடம்) குளிப்பவர்களுக்கு இப்பிறவி முடிந்ததும் மோட்சம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. இதைப்போன்றே மிக புனிதமாகக் கருதப்படும் பிற இடங்களும் உள்ளன. அவை, யமுனை, நர்மதை, தப்தி, கிருஷ்ணா, காவேரி, சரயு போன்ற நதிகள், கன்யாகுமரி மற்றும் ராமேஸ்வரத்தில் கடல் நீராடல், கும்பகோணம் மகாமகக் குள நீராடல், ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் ஏரி நீராடல்.... என்று பல, இப்படி பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள். தங்கள் வீட்டில் பூஜையறையில் கங்காஜலம் வைத்திருந்தால், அதையாவது நீராட பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக, ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம எனச் சொல்லி நீராடுவது சிறந்த பலனளிக்கும் என்பது வட இந்தியப் பகுதிகளில் உள்ள வழக்கம்.

விரதங்களும், பூஜைகளும், தானங்களும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள சிறந்த வழிகள் என்றாலும், இந்த விழாவைப் பொறுத்தவரை புனித நீராடுவதே உத்தம பலனைத் தரும்; விஷ்ணு ப்ரிதிக்கு இதே சிறந்த வழி என்றும் வலியுறுத்தப்படுகிறது. பிரயtகையில் நடைபெறும் இந்த வைபவத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள். யாத்ரிகர்கள். சாதுக்கள், துறவிகள், ஆசார்யர்கள் என பலரும் புனித நீராடுவர். இதேபோன்று ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் ஒரிஸ்ஸா உள்ளிட்ட பகுதிகளில் மிகப் பெரும் அளவில் பின்பற்றப்படுகிறது. வாழை இலையில் வெற்றிலை பாக்கு சிவப்பு கயிறு, குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றை வைத்து சத்யநாராயணா பூஜை நடக்கும். இந்த திருநாளை முன்னிட்டு அலகாபாத்தில் விசேஷமான கண்காட்சிகளும் நடைபெறும். இந்தக் காலத்தில் (மாக மாதத்தில்) பிரயாகையில் தங்கியிருப்பது பெரும்பேறு என்றும் நம்பிக்கை உண்டு. அதனால், ஏராளமான பக்தர்கள் இந்த மாதத்தில் இங்கு தங்கியிருப்பார்கள். புத்த மதத்தினர் இந்த நாளில் அவர்களின் திரிபிடகத்தில் இருந்து மந்திரங்களை ஜபித்தவண்ணம் இருப்பார்கள்.

இதுபோன்று இந்த மாக பவுர்ணமியில் தமிழ் நாட்டில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தெப்போற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். மீனாட்சி அம்மன் கோயிலையும் தெப்பக் குளத்தையும் கி.பி. 1623 - 1655 வரை ஆண்ட திருமலை நாயக்கர், திருப்பணிகள் செய்து புதுப்பித்தார். இதில் அபூர்வ ஒற்றுமை என்னவென்றால், திருமலை நாயக்கர் பிறந்ததும் இந்த மாக பவுர்ணமி அன்றுதான். கிருஷ்ண பக்தர்கள் இந்த நாளில் கிருஷ்ணர் வளர்ந்த இடமான பிருந்தாவனத்துக்கும், கோவர்த்தன கிரிக்கும் சென்று வருவது மிகவும் புண்ணிய பலன்களைத்தரும் என்று நம்புகிறார்கள்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.