தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் எப்போது துவங்கியது?

கிறிஸ்துமஸ் நாள் டிசம்பர் 25 என கி.பி. 154ம் ஆண்டில் தான் போப் ஆண்டவர் ஜுலியசால் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது.  கிறிஸ்து + மாஸ் என்ற சொல்லில் இருந்தே கிறிஸ்துமஸ் என்ற சொல் பிறந்தது. இதற்கு கிறிஸ்துவின் ஆராதனை என்று பொருள்.

இயேசு என்பதன் பொருள்: இயேசு என்பதற்கு விடுதலையாக்குபவர் என்றும் கிறிஸ்து என்பதற்கு தீர்க்கதரிசி என்றும் அர்த்தம்.  கிறிஸ்துவாக இயேசு ஏன் உலகில் பிறந்தார் என்பதை ஆராய வேண்டும். கடவுள் முதல் மனிதனாக ஆதாமையும், அவனுக்கு  துணையாக ஏவாளையும் படைத்தார். பின்பு இவர்கள் மூலம் மக்கள் ஜனத்தொகை உலகில் பெருகத் துவங்கி, சேத், ஏனோஸ், கேனான்,  மகலாலேயல், யாரேத், ஏனோக், மெத்தூசலா, லாமேக், நோவா, சேம், அர்பக்சாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகு, செருக், நாகோர், தேரா,  ஆபிரகாம் வரை 20தலைமுறைகள் உருவாயின. 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆதாமிலிருந்து துவங்கிய பாவம் உலகில் அதிகமானது.  மனிதன் பாவ மன்னிப்பை பெற ஆட்டையும், மாட்டையும், பறவைகளையும் பலியாக கடவுளுக்குச் செலுத்தி வந்தான். ஆனாலும்,  பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் மறுபடியும் பாவத்திற்கு அடிமையாகி வந்தான். மனிதனின் பாவம் போக்க  வேண்டுமானால் தானே மனிதனாகப் பிறந்து பாவப் பலியாக தானே இறக்க வேண்டும் என்று கடவுள் விருப்பம் கொண்டார்.

கப்பலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் காந்திஜி: 1931ல் மகாத்மா காந்தி வட்டமேஜை மாநாட்டிற்காக லண்டன் சென்று, கப்பலில்  திரும்பிக் கொண்டிருந்தார். மும்பையை நோக்கி கப்பல் வந்து கொண்டிருந்தது. பயணிகளுக்கு கிறிஸ்துமஸ் விழாவை கப்பலிலேயே  கொண்டாட வேண்டிய நிலை இருந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், புராட்டஸ்டென்டுகளும் கப்பலில் இருந்தனர். காலை  ஆராதனையை யார் நடத்துவது என்பதில் பிரச்னை ஏற்பட்டது. அவர்கள் மகாத்மா காந்தியிடம் வந்து, எங்கள் ஆராதனையில் நீங்களும்  கலந்து கொண்டு பேச வேண்டும்,  என கேட்டுக் கொண்டனர். காந்திஜி அவர்களிடம், காலை எத்தனை மணிக்கு ஆராதனை  நடத்துவீர்கள்? என்று கேட்டார்.அவர்கள், உங்கள் வசதிப்படி நடத்திக் கொள்ளலாம், என்றனர். காந்திஜி சிரித்தபடியே,என்னுடைய  பிரார்த்தனை நேரம் அதிகாலை 4மணி. அப்போது ஆராதனையை நடத்தி விடலாமா? என்று கேட்டார்.ஐயையோ! அந்த நேரத்தில்  எல்லாரும் வர மாட்டார்களே! என்றனர் கிறிஸ்தவர்கள்.உடனே காந்திஜி, தூங்க விரும்புபவர்கள் தாராளமாக தூங்கட்டும். எத்தனைபேர்  வருகிறார்களோ, அவர்களைக் கொண்டு ஆராதனையை நடத்தி விடலாம். அப்போதே நானும் பேசி விடுகிறேன், என்றார். மறுநாள் காலை  4 மணிக்கு கப்பலின் மேல்தளத்தில் ஏராளமானோர் கூடி விட்டனர். எல்லாருமே எழுந்து வந்தது காந்திஜிக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  காந்திஜி அவர்களிடையே பேசினார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்காகப் பிறந்தார். அவரது பிறந்தநாளை, ஒருவிழாவாக மட்டும்  கருதி விடக் கூடாது. நமது வாழ்க்கையை, அன்றாடம் ஒளி வீசச் செய்யும் நிலையான சம்பவிப்பு என்று மனதில் கொள்ள வேண்டும்.  பூசல்களைத் தள்ளி வைத்து விட்டு, ஒருவர் மேல் மற்றவர் அன்பு செலுத்தினால் தான், கிறிஸ்தவ மதத்தை உண்மையாகப்  பின்பற்றியதாக ஆகும், என்றார். அவரது சொற்பொழிவைக் கேட்ட அத்தனை பேரும் நெஞ்சம் நெகிழ்ந்தனர்.

பானை அடிக்கும் நிகழ்ச்சி: இந்துக்கள் கண்ணன் பிறந்தநாளின் போது உறியடி விழா நடத்துவது போல, மெக்சிகோவில் கிறிஸ்துமஸ்  நாளில் பானைடியடி நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு பானையின் மீது சாத்தானை வரைந்து, அதனுள் பொம்மைகள், பண்டங்கள் நிரப்பப்படும்.  அதை உயரத்தில் கட்டித் தொங்கவிடுவர். மேலும் கீழுமாக அந்த பானையை இறக்க, சிறுவர்கள் அதனை தடியால் அடித்து  நொறுக்குவர். உள்ளிருந்து பொம்மை மற்றும் இனிப்புகள் சிந்தும். சிறுவர்கள் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவர். சாத்தான் நமக்கு நன்மை  செய்வது போல கவரப் பார்க்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

தொழுவத்து சர்ச்: இயேசுநாதர் பெத்லகேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இந்நகரில் சிறப்பு பெற்ற ஏராளமான சர்ச்”கள்  உள்ளன. இருப்பினும், அவர் பிறந்த தொழுவத்தின் மீது சர்ச் ஆப் நேட்டிவிட்டி என்ற மிகப்பெரிய தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.  கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த சர்ச்சை கண்டுகளித்துவிட வேண்டும் என்று  கருதுகிறார்கள்.

இயேசு பிறந்த ஜெருசலேம்: யூதமதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களின் புனித இடமாக விளங்குவது ஜெருசலேம். மத்திய  தரைக்கடலையும் சாக்கடலையும் பிரிக்கிற வளைவில் இந்நகரம் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்றுத்  திகழ்கிற புண்ணியத்தலம். அமைதி, சாந்தம், சமாதானம் என்று கடவுளை எபிரேய மக்கள் அழைத்தனர். சுமேரிய மொழியில் ஜெரு  என்றால் நகரம் . சலேம் என்றால் அமைதி. அமைதியான நகரம் என்பது இதன் பொருள். இந்நகரம் கடவுளால் நிறுவப்பட்டது. ஜெருசலேம்  மூன்று பகுதிகளாக உள்ளது. முதற்பகுதி கி.பி.,16ம் நூற்றாண்டில், மன்னர் சுலைமானால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த பழைய நகரம்.  இப்பகுதி பைபிளில் கூறப்பட்டுள்ள ஜெருசலேமை உள்ளடக்கியுள்ளது. இரண்டாம் பகுதி பழைய நகரின் வடக்கே ஒலிவக்குன்றின்  சரிவில் அரேபியர்களின் குடியிருப்புகள் அடங்கியுள்ள இடம். இயேசுகிறிஸ்து அடிக்கடி சென்று போதித்த பெத்தானியா இப்பகுதியில்  உள்ளது. மூன்றாவது, பழைய நகரின் மேற்கிலும் தெற்கிலும் ச ஐரோப்பிய அமெரிக்காக் கட்டடக்கலையின் பிரதிபலிப்பைக் கொண்ட  கட்டடங்கள் உள்ள யூதர்களின் பகுதி. இங்குள்ள புனித கல்லறை ஆலயம் கிறிஸ்தவர்களின் மிக முக்கிய புண்ணிய இடமாக  விளங்குகிறது. பைபிளில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் போதனை, அவரது எழுச்சி, உயிர்த்தெழுதல், விண்ணுலகம் அடைதல் முதலிய  முக்கிய நிகழ்ச்சிகள் ஜெருசலேமில் நடைபெற்றதாக கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் நம்புகின்றனர்.

ஆன்மிக நிகழ்வுகள் நடந்த அநேக இடங்கள் ஜெருசலேமில் உள்ளன. சிலோவாம், பெதத்தா குளங்கள், பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி  இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்து காட்டிய இடங்களாகும். சீலோவாம் குளத்தில் இயேசு ஒரு குருடனுக்குப் பார்வை வரும்படி  குணமாக்கினார். பைபிளில் யோவான் ஒன்பதாவது அதிகாரத்தில் இந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள தேவாலயங்கள்  இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றோடு தொடர்புடையன. ஓமரின் தேவாலயம், தாவீதின் கல்லறை ஆகியவை இங்கு உள்ளன.  இந்நகரின் வடகிழக்குப் பகுதியில் கெத்சமெனே தோட்டம் உள்ளது. இங்கு காணப்படும் சில மரங்கள் இயேசுவின் காலத்திலிருந்தே  இருக்கின்றன. பிலாத்துதான் இயேசுவைப் பிடித்து நியாயம் விசாரித்தவன். அவனது மண்டபம் இங்குள்ளது. இவ்வூரின் வடகிழக்கில்  கல்வாரி மலை இருக்கிறது. இங்கு தான் இயேசுவை சிலுவையில் அறைந்தனர். கல்வாரி மலை அருகிலுள்ள கல்லறை தோட்டத்தில்  இயேசுவை அடக்கம் பண்ணிய கல்லறை உள்ளது. இங்கு தான் இயேசு உயிர்த்தெழவும் செய்தார். இயேசு கிறிஸ்து அவருடைய  சீடர்களோடு திருவிருந்தில் (ராப்போஜனம்) பங்கேற்ற இடத்தை மேல்வீட்டறை என்கின்றனர். பைபிளில் கூறப்பட்டிருக்கும் மிகப்  பழமையான அநேக இடங்கள் இன்றும் ஜெருசலேமில் உள்ளன. -எல்.பிரைட், தேவகோட்டை
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.