தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > ஈஸ்டர்
ஈஸ்டர்
இயேசு மரித்த பிறகு அவரது உடலையும், சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களின் உடலையும் சிலுவைகளிலிருந்து அகற்றப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர்கள் இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையின் அருகில் வந்தனர். அவர் மரித்து போயிருந்தார். ஒரு போர்சேவகன் அவரது விலாவில் குத்தினான். ரத்தமும், தண்ணீரும் வெளிப்பட்டது. இதன் பிறகு யோசோப்பு, மன்னன் பிலாத்துவிடம் சென்று, இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போக அனுமதி கேட்டார். பிலாத்துவும் அனுமதித்தான். இயேசுவின் உடல் அருகே வந்த நிக்கோதேமூன் என்பவன் இயேசுவின் சரீரத்தில் மணம் மிக்க சுகந்தப்பொருட்களைத் தடவி, துணியில் சுற்றி கட்டினான். கண்மலையில் வெட்டியிருந்த கல்லறைக்குள் இயேசுவின் சரீரத்தை வைத்தனர். கல்லறை வாசலில் பெரிய கல்லைப் புரட்டி வைத்தார்கள். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருள் நீங்காத பொழுதில் ஆண்டவருடைய கல்லறைக்கு மகதலேனா மரியாள் என்பவரும், யாக்கோபின் தாயாகிய மரியாள் சலோமி என்பவரும் சுகந்த வர்க்கங்களை கொண்டு சென்றனர். கல்லறைக் கல்லை எப்படிப் புரட்டுவது என அவர்கள் பேசிக் கொண்டே சென்றனர்.

கல்லறை அருகே சென்றதும் கல் தானாக புரண்டு கிடந்ததைப் பார்த்தனர். இதை யார் அகற்றியிருக்கக் கூடும்?என்றவர்களாய், கல்லறைக்குள் எட்டிப்பார்த்தனர். உள்ளே இயேசுவின் உடல் இல்லை. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இயேசுவின் சீடர்களான சீமோன் பேதுரு, யோவான் ஆகியோரிடம் சென்று, யாரோ ஆண்டவரை கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவரை வைத்த இடத்தில் அவர் இல்லை, என்று சொன்னார்கள். இதன் பிறகு மற்ற பெண்களும் கல்லறைக்கு சென்றார்கள். அப்போது பிரகாசமுள்ள ஆடையணிந்த இருவரைக் கண்டார்கள். உயிரோடு இருக்கிறவரை நீங்கள் மரித்தோர் இடத்தில் தேடுகிறது என்ன? அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். இனி நீங்கள் போய் இந்த செய்தியை அவருடைய சீடர்களுக்கு அறிவியுங்கள், என்று சொன்னார்கள். அந்தப் பெண்கள் நடுக்கமும், திகிலும் அடைந்தவர்களாய் கல்லறையை விட்டு அகன்றனர். அவர்கள் செல்லும் வழியில் இயேசு வந்து கொண்டிருந்தார். அவர்களை வாழ்க என்று வாழ்த்தியதுடன், அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள், நீங்கள் போய் என்சீடர்கள் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்கள் அங்கே என்னைக் காண்பார்கள், என்றார்.

இயேசு உயிர்த்தெழுந்த அதேநாளில் இரண்டு பேர் எம்மோவு என்ற நகரத்துக்குச் சென்றனர்.  அவர்களது முகம் துக்ககரமாக இருந்தது.  அவர்களைப் இயேசு பார்த்தார். நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அவர்கள், இயேசு என்ற தீர்க்கதரிசி  சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூட கல்லறையில் காணவில்லை, என்றனர். உடனே இயேசு அவர்களை நோக்கி,  கிறிஸ்து தமது மகிமைகளை வெளிப்படுத்தும் நிலையில், இந்த பாடுகளையெல்லாம் அடைந்து தீர வேண்டுமல்லவா? என்றார். இறந்த பிறகும் கூட விலா எலும்பில் குத்துப்பட்டவர் இயேசுபிரான். தெய்வீகமான அவர் மக்களை நல்வழிக்கு திருப்ப முயன்றதால் உயிரையே கொடுத்தார். தன்னுயிர் கொடுத்தேனும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என மக்களுக்கு  உணர்த்தினார். இயேசு பிரான் உயிர்த்தெழுந்த  நன்னாளில் அவரது போதனைகளைப் பின்பற்றி நடக்க உறுதி கொள்வோம்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.